பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு 147 மொழிகளிலமைந்த சொற்களைத் தொகுத்தும் வகுத்தும் ஆராய்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிட்டார். அவற்றை ஊன்றிக் கற்ற மேனுட்டு அறிஞர்கள் ஆரிய இனத்தைச் சேராத மொழிகளும் இந்திய நாட்டில் உள்ளன என்ற உண்மையை அறிந்தனர். பம்பாய் நகரில் பல்லாண்டுகள் உயர்தர நீதிமன்றத் தலைவராக இருந்த பெறி என்ற பெரியார் இமயம் முதல் குமரி வரை வழங்கும் மொழிகளையெல்லாம் ஆராய்ந்து தாம் கண்ட உண்மைகளைக் கட்டுரை வாயிலாக வெளிப்படுத்திளுர்; வடநாட்டில் வழங்கும் மொழிகள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவை என்றும், தென்னுட்டில் வழங்கும் மொழிகள் தமிழ் வகு ப் ைபச் சேர்ந்தவையென்றும் தமது கொள்கையை வெளியிட்டார். இக் கொள்கை பல மேனுட்டு அறிஞரின் சிந்தையைக் கவர்ந்தது. தென்னுட்டில் பல துறைகளிலும் பணியாற்றிய ஐரோப்பிய அறிஞர்கள் தென் னுட்டில் வ ழ ங் கி ய மொழிகளில் தமது ஆராய்ச்சியைச் செலுத்தினர். டாக்டர் குண்டெர்ட் (Dr. Gundert) என்பார் கேரள நாட்டில் வழங்கும் மலையாள மொழியைச் செவ்வனே கற்று வடமொழியில் திராவிடக் கூறுகள் (Dravidia: Elements in Sanskrit) என்ற ஆராய்ச்சிக் கட்டுரையைக் கி. பி. 1869-இல் செருமானியக் கீழ்நாட்டுக்கலைக் '&gpš#sir už $fisosassö (The Journal of the German Oriental Society) வெளியிட்டார். பின்னர் டாக்டச் கிட்டல் (Dr. Kittel) என்ற அறிஞர் கருநாடக நாட்டில் வழங்கும் கன்னட மொழியை முட்டறுத்துணர்ந்து கி. பி. 1872-ஆம் ஆண்டில் வடமொழி அகராதிகளில் திராவிடச் சொற்கள்’ என்ற கட்டுரையை வெளியிட்டார், தாம் எழுதின கன்னட அகராதியிலும் வடமொழி கடன் வாங்கின சொற்கள் என 490 சொற்களை வகைப்படுத்திக்