பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/19

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10 அறிவுக்கு விருந்து கைம்மலர்மேல் அம்மனையாம் கந்துகமாம் கழங்குமாம் அம்மலைகள் அவள்வேண்டின் ஆகாத தொன்றுண்டோ?7 (அம்மனை-ஒருவகை விளையாட்டுக் கருவி; கந்துகம்-பந்து; கழங்கு- கழற்சிக்காய்) என்ற தாழிசைகளால் கூறுகின்றார் கவிஞர். உலகிலுள்ள மலைகளைக் காதணிகளாகவும் அணி வாளாம்; அவள் விரும்பினால் அவற்றைக் கோத்து இரத்தினமாலையாகவும் சூடுவாளாம். அம்மலைகள் அவளுடைய கையில் அம்மனையாகவும் அமையும்; பந்துக்களாவும் ஆகக் கூடும்; கழங்குகளாகவும் கொள்ளப்பெறும். காளிதேவியை வழிபடுவோர் அவள் திருக்கோயிலைப் பெருக்கி, பசுங்குருதி நீரைத் தெளித்து, கொழுப்பாகிய மலர்களைத் தூவி, பிணங்களைச் சுடும் சுடலையிலுள்ள ஈம விளக்குகளை எங்கும் ஏற்றி வைப்பர். அவளை வழிபடுவோரின் ஒலி கடலொலிபோல் எங்கும் முழங்கும். வீரரின் வழிபாட்டினைக் கவிஞர், சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப் பலியாக உறுப்பரிந்து தருதும் என்று பாவும்ஒலி கடல் ஒலிபோல் பாக்குமாலோ.8 (தறுகண்-அஞ்சாமை; பரவுதல்-துதித்தல்;பரக்கும்-பரவும்.) 7 தாழி-132, 133. 8 தாழி-109