பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/20

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தெய்வப் பரணி

11



என்று கூறுகின்றனர். அஞ்சாத நெஞ்சினையுடைய வீரர்கள் தேவியை வரங்களை வேண்டி அவற்றிற்கு ஈடாகத் தங்கள் உறுப்புக்களை அறுத்து தருவதாகக் கூறுகின்றனர். பலவித வாத்திய ஒலிகளை ஒலிக்கும் வீரர்கள் தங்கள் விலா எலும்புகளைச் சமித்தாகவும், குருதியை நெய்யாகவும் கொண்டு 'ஓமத்தீ வளர்த்து வேள்விபுரிவர். சில வீரர்கள் தங்கள் சிரங்களை அறுத்து தேவியின் கையில் கொடுப்பர்; அத் தலைகள் தேவி யைப் பரவும்; தலைகுறைந்த உடலங்கள் கும்பிட்டு நிற்கும். இச்செய்திகளைக் கவிஞர்,

சொல்லரிய ஓமத்தி வளர்ப்ப ராலோ
தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வரங்கி
வல்லெரியின் மிசைஎரிய விடுவ ராலோ
வழிகுருதி நெய்யாக வளர்ப்ப ராலோ.

[பழுஎலும்பு-விலா எலும்பு; வாங்கி-பிடுங்கி]

அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அசிவ ராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ[1]

[அணங்கு-காளி, கொற்றவை-காளி]

என்ற தாழிசைகளால் கூறுகின்ருர், கோயில்களைச் சூழ்ந்துள்ள மூங்கில்களில் தொங்கும் தலைகளின் பாரத் தால் அவை வளைந்து இரத்தப் பெருக்கில் மூழ்கி இருக்கும். அவை இறந்து பட்ட வீரர்களின் உடல்களைக் கவர்வதற்குக் காலன் போட்ட தூண்டில்களைப் போலத் தோன்றும்.


  1. 9. தாழி-110,111