பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வப் பரணி 15 சாவத்தர்ல் பெறுதுமோ சதுமுகன்ருன் கீழ்நரங்கள் மேளுள் செய்த பாவத்தால் எம்வயிற்றில் பசியைவைத்தான் பாவியேம் பசிக்கொன் றில்லேம்." [சாவம்-பெரியோர் சாபம்; சதுமுகன்-நான்முகன்; என்று பேய்கள் தம் பசிநிலையைத் தெரிவிக்கின்றன. ஒருசில நன்னிமித்தங்களால் தமக்கு அண்மையில் உணவுகிடைக்கும் என்று நம்பியேதாம் உயிர்வாழ்ந்திருப் பதாகவும்கூறுகின்றன. அப்பொழுது இமயத்தினின்றும் போந்த முதுபேய் தான் கலிங்க நாட்டின் வழியாக வருங்கால் ஆங்குக் கண்ட சில தீநிமித்தங்களைக்கூறுகின் றது, அவற்றைக் கேட்ட காளிதேவி கணிதப் பேய் நன விலும் கனவிலும் கண்டதைக் கூறி விரைவில் ஒரு பரணிப்போர் நடைபெறப் போவதாக உரைக்கின்ருள். பேய்கள் மகிழ்ச்சியால் குதித்துக் கூத்தாடுகின்றன. இச் செய்திகளைப் பேய் முறைப்பாடு' என்ற பகுதியால் அறியலாம். அதன்பின்னர் காளிதேவி குலோத்துங்கன் பெருமை முதலியவற்றையும் அவன் பாலாற்றங்கரைக் குப் பரிமீது வேட்டையாடச் சென்று கச்சியடைந்தமை யையும் கூறிக்கொண்டிருக்கையில் ஒரு பேய் ஓடோடிக் காளியை வந்தடைந்து கலிங்கப் போரினைத் தான் கண்டதாக மொழிகின்றது. அதன் பின்னர், கலிங்கப் போரைக்கூறுமாறு காளிதேவிஉரைக்கின்ருள் இவற்றை அவதாரம் என்ற பகுதியில் காணலாம். காளி தேவியின் வே ண் டு கே ட் கிணங்கிய கலிங்கப் பேய், is. தா-வில்