பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வப் பரணி 24

       பாவ ரும்களி சிறக்கவே தருமம் எங்கும் என்றும்உன தாகவே தேவர் இன்னருன் தழைக்கவே முனிவர்

செய்த அப்படின் விளைக்கவே. {களி-மகிழ்ச்சி; அருள்-கருணை; வேத நன்னெறி பரக்கவே அபயன் வென்ற வெங்கலி கரக்கவே பூத லம்புகழ் பரக்கவே புவி நிலைக்க வேபுயல் சுரக்கவே." {பரக்க-பரவுக; கலி-துன்பம்; கரக்க-மறைக; நிலைக்கநிலைபெறுக! என்ற வாழ்த்துடன் நூல் முற்றுப்பெறுகின்றது. [4] முதன் முதலாகத் தாழிசையால் பாடப்பெற்ற இந்நூல் பரணி நூ ல் க ட் .ெ க ல் ல ம் தலைசிறந்த தாய், பரணி பாடுவோர்க்கெல்லாம் முன்மாதிரியாய், இலக்கியவானில் ஒரு கலங்கரை விளக்கம்போல் நின்று நிலவுகின்றது. இத்தகைய நூலின் சிறப்பை ஒரு சிறிது காண்போம். "கலிங்கத்துப்பரணி கற்போர்க்கு ஒரு கற்பனை ஊற்ருக அமைந்துள்ளது. பல வரலாற்று நிகழ்ச்சிகள் கவிஞரின் கற்பனையால் இலக்கிய நயம் செறிந்து சிந்தைக்கு விருந்தாக அமைகின்றன நிகழ்ச்சிகள் நடைபெற்ற பல நூற்ருண்டுகட்குப் பின்னருள்ள நம்முடைய புலன்கள் அக்காட்சிகளை நேரில் கண்டு அனுபவியாத நிலையிலும் கவிஞருடைய கற்பனையால் நாம் அந்நிகழ்ச்சிகளை நேரில் காண்பதுபோன்ற அனு 23. தாழி-55, 56