பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஆடும் பெருமாள் : பாடுவதையே பணியாகக்கொண்டு பகவான்மீது பக்தி செலுத்தியவர்களில் தமிழ்க் கவிஞர்கள் தலை சிறந்தவர்கள். முத்தமிழால் வைதாரையும் வாழவைப் போளுகிய முருகப்பெருமானைக் கவிதை மலர்களால் வழிபாடு செய்த அருணகிரியார்கூட,

        'பசடும் பணியே பணியா வருள்வாய்”

என்று ஆண்டவனிடம் முறையிட்டார் என்பதை தாம் படிக்கும்போது அவருக்குப் பாடல்களால் பக்தி செலுத்துவதில் எவ்வளவு ஆர்வம் இருந்திருக்க வேண்டும் என்பதை ஒருவாறு அறியமுடிகின்றது. தமிழ்நாட்டிலே பக்திமனம் கமழச்செய்த பேரியோர் களில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் சிறந்து விளங்கு கின்றனர். சைவமும் வைணவமும் செழித்த காலத்தில் பக்திமணங் கமழும் கடவுட்பாடல்கள் தமிழ் இலக்கியச் செல்வத்தைப் பெருக்கின. தமிழரின் சமய வேட்கையால் தமிழ் இலக்கிய உலகம் பெற்ற பேறு இவ்வளவு

  • குன்றக்குடி மணிமொழி ஒப்பிதழில் (10–7-1954) வெளிவந்தது.