பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமாள் 35 தேவகி ஈன்றெடுத்து ஆயர்பாடியில் யசோதை தேவியால் வளர்க்கப்பெற்ற் கண்ணனும், கவிஞருடைய மனக்கண்முன் தோன்றுகின்றனர். இ ர | ம னு ம் கண்ணனும் அ வ ர வர் த ய் மார் கண்ணினுள் பாவைகளாகத் தோன்றும் காட்சியையும் காண்கின் குச் கவிஞர். இடத்தாலும் காலத்தாலும் சேய்மையில் ஞானக் கண்ணுல் கண்டகாட்சிகளும் .ெ பரு மா ள் இலக்குமியுடன் வீற்றிருந்து ஊஞ்சலாடும் காட்சியும் ஒன்றுசேர்ந்து ஓர் அழகிய சொல்லோவியமாகவடிவெடுக் கின்றன. இதோ அக் கவிஞரின் சொல்லோவியம்: மணங்கமழ் பூவையும் மயிலும் தமாலக்காடும் வண்கிளியும் நீலவெற்பும் படமான் கன்றும் இணங்குகட லுத்துகிரும் காரும் மின்னும் யமுனேயென்னும் திருநதியும் எகினப்பேடும் கணங்குழைய கோகலே தேவகி யசோதை கண்மணியும் பாவையும்போல் கமல வீட்டில் அணங்காசி னுடன் குலவி ஆடீர் ஊசல் அலங்கர மாயவனே ஆடிங் ஊசல்: (பூவை-காயாமரம், தமாலக்காடு-பச்சிலைக் காடு; வெற்புமலை, மடமான்-இளைய பெண் மான்; இனங்கு-விளங்கும்; துகிர் -பவளக்கொடி கார்-மேகம்; மின்-மின்னல்; எகினப்பேடு. அன்னப்பேடை, கணங்குழைய-பலவாய்த் திரண்ட குழையெனும் காதணிகளையுடைய பாவை-கண்ணினுள் தோன்றும் உருவம்; கமலவீடு-தாமரை மலராகிய இருப்பிடம்; அணங்கு அரசி-தெய்வ மகளிர்க்குத் தலைமையான இலக்குமி, குலவி-பொருந்தி.) காயாமரம், பச்சிலைக் காடு, நீலவெற்பு, கடல், மேகம், யமுனை நதி, க ண் ம ணி இவ ற் ைற நிறத்தால் பெருமாளுக்கும், மயில், கிளி, மான், பவளக்கொடி, மின்னல், அன்னப் பறவை, பாவை, இவற்றை இயல் பாலும் தன்மையாலும் இலக்குமிக்கும் உவமையளித்த