பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் பெருமாள் 39 பற்று-பாசம்-தூண்களாக நின்று தாங்குகின்றது. பிறவிதோறும் மக்கள் சம்பாதிக்கும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டு வினைகளும் ஊஞ்சலை ஆட்டுபவராக இருந்து ஆட்டுவிக்கின்றன. இவ் வினைப்பயன்களுக்குத் தக்கவாறு மக்கள் கொடிய நரகமாகிய வெளியில் இறங்கு கின்றனர்; சிறிதும் தடையின்றி துறக்கத்திற்கும் ஏறுகின்றனர்; இப் பூவுலகில் தங்கவும் செய்கின்றனர். இவ்வாறு ஆன்மாக்கள் பல பிறவிகளால் தடுமாறித் துன்பம் அனுபவிக்கும் இவ்வூசலாட்டம் நீங்கி சாயுச்சிய பதவியை அடைவதாகப் பக்தர்கள் பகவானை ஊசல்பாடி யிருக்கின்றனர் என்பது இத் தத்துவம். இவ்வாறு கொள்வதில் தவறு இல்லையல்லவா? இத்தகைய நம் பிக்கையை ஒவ்வொருவரும் ஆன்ம வளர்ச்சிக்கு அவசிய மாகக் கொள்ளவேண்டும் என்பதற்கு என்ன தடை?