பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 புகையிலையின் மகிமை 4 கல்லூரிகட்குப் பயில்வதற்காக வருபவர்கள் சிறு சுருட்டுப் பிடித்தலை முதற் கல்வி'யாகக் கொண்டு விடுகின்றனர். சிகரெட் நட்பு என்பது இக்காலத்தில் காணும் புதியதோர் நட்புவகை. சுருட்டிலும், சிறு சுருட்டிலும் எண்ணற்ற வகைகளிருப்பதை எல்லா செய்தித்தாள்களிலும் காணப்பெறும் விளம்பரங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு அவதார வகையும் தம்மை வழிபாடு செய்யும் பக்தகோடிகளை நாடியே நிற்கின்றது! சுருட்டு, சிறு சுருட்டுக்களுக்கு அடுத்தபடியாக புகையிலையின் சிறந்த அவதாரம் திருமூக்கமுது. "பட்டணம் பொடி' என்று எங்கும் பல்வேறு விளம்பரங் களைக் காண்கின்ருேமன்ருே? வைதிகர்கள் த ம து 'இஷ்டமூர்த் திகளைத் தம்முடனே வைத்துக்கொண்டுவழி படுவதைப் போலவே, திருமூக்கமுது பக்தர்களும் வெள்ளி, தந்தம், கொம்பு போன்றவைகளாற் செய்யப் பெற்ற சம்படங்களில் திருமூக்கமுதை வைத்து அவற்றைத் தம் இடுப்பில் செருகிக்கொண்டு அடிக்கடி 'வழிபாடு” நடத்திவருவதையும் நாம் காணுமல் இல்லை. இவர்கள் பக்தியைக்கண்ட கவிஞர் .ெ பா டி யி ன் மகிமையை, - வாடைப் பொடிகதம்பம் ஆனவெல்லாம் உன்னுடைய சாடிப் பொடிக்குச் சரியுண்டோ ? என்று கூறுகின் ருர், இவ்வுலக வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலுமே நாம் 'பொடி நண்பர்களை'ப் பார்க்கின்ருேம். ஒரு சிட்டிகைப் பொடிக்காகத் தம் நிலையையும் மறந்து, காலத்தையும் வீணுக்கிக் காத்திருந்து கெஞ்சி நிற்கும்