பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகையிலையின் மகிமை 49 பாடல் எப்படியிருக்கின்றது? அடியிற்காணும் சிலப்பதி காரப் பாடல்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள் : மூவுலகும் ஈசடியான் முறை திசம்பா வகைமுடியத் தாவியசே வடிசிவப்பத் தம்பியொடுங் கான்போத்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்ர்ே கேளாத செவியென்ன செவியே; பெரியவனே மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல வுத்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியுங் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணுத கண்னென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்னென்ன கண்னே; மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனுர் வஞ்சம் கடந்தானே நூற்.அவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரனமுழங்கப் பஞ்சவர்க்குத் துாது நடந்தானே ஏத்தாத நகவென்ன நாவே நாசாய ளுவென்ஞ தாவென்ன நாவே; நடைதான் வேறு; போக்கு ஒன்றேதான். திருமால் சீரைக்கேளாத .ெ ச வி யு ம், அக் கரியவனைக் காணுத கண்ணும், பஞ்சவர்க்குத் துதுசென்ருனை ஏத்தாத நாவும் பயனிலவென்பது தி ரு ம ல் வழிபாடு செய்துவரும் ஆய்ச்சியர்களின் கொள்கை. இதுபோலவே, சோம சுந்தரன் கடையிற் செய்த திருமூக்கமுதைச் சுவை பார்க்காத மூக்கும் பயனற்றது என்பதுதான் தியாகராச செட்டியாரின் கொள்கையும். பொடியினைச் சுவைப்பது மூக்குமட்டிலுந்தானே? புகையிலையிலிருந்து மயக்கத்தைத் தர வல்ல ஒருவகைச் சாராய பானமும் உண்டாக்கப்பெறுகின்றது. அ. வி. 4.