பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நூல்முகம்

வேண்டத் தக்க தறிவோய்நீ
        வேண்ட முழுதுத் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
        வேண்டி யென்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
        யானும் அதுவே வேண்டினல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
        அதுவும் உன் தன் விருப்பன்றே.[1]

-மாணிக்கவாசகர்.

ளவியலார் மனத்தினைப் பல நிலைகளாகப் பிரித்து ஆய்ந்து பல உண்மைகளை வெளியிட்டுள்ளனர். ஒரு வகையில் அவர்கள் அறிதல்நிலை,[2] உணர்தல்நிலை[3], இயற்றிநிலை[4] என்று மனத்தை முந்நிலைகளாகப் பகுத்துப் பேசுவர். தனியொரு மனிதனுடைய ஆளுமை[5] சிறந்த முறையில் வளர்ச்சியும் துலக்கமும்[6] அடைய வேண்டுமாயின் இம்மூன்று நிலைகளிலும் அம்மனிதன் பயிற்சி பெறுதல் வேண்டும். இத்தகைய பயிற்சியினைக் கல்வி நிலையங்கள் நல்குகின்றன. பாடத் திட்டங்களும் பயிற்றும் முறைகளும், நிலைய நடவடிக்கைகளும் அதற்கேற்ப அமைக்கப் பெறுகின்றன.


  1. 1. திருவாசகம்-குழைத்த பத்து-6.
  2. 2. அறிதல் நிலை - cognition.
  3. 3. உணர்தல் நிலை - Affection.
  4. 4. இயற்றி நிலை - Conation.
  5. 5. Personality,.
  6. 6. துலக்கம் – Development.