பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 _அறிவுக்கு விருந்து நன்கு உணர்ந்தே அவர்கள் அங்ஙனம் அசைக் கின்றனர். பல பொருள்களையுண்டு பலசுவைகளைக் கண்ட அனுபவத்தின் விளைவாக இவர்கள் மனம் இனிமைக்கு ஒர் அளவுகோலை வகுத்துக்கொண்டுள்ளது; அந்த அளவுகோவின் மேல் எல்லைக்கு வரையறை இல்லை. அந்த மேல் எல்லைதான் வானமிழ்தத்தின் இனிமையைக் காட்டுவது. இந்த அ ள வு ேக ச லை க் கொண்டே சொல்லுவோரின் குறிப்பைக் கேட்போர் அறிகின்றனர். இத்தகையதொரு அளவுகோல் போன்ற தொன்றைக்கொண்டே கவிதைகளை அனுபவித்தவர் களும் தம் அனுபவத்தைச் சொற்களால் விளக்கியிருக் கின்றனர். திருவாசகத் தேனில் ஊறிய வடலூரார், சைன்கலத்த மாணிக்க வாசக!தின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலத்து பால்கலந்து செழுங்கனிதீஞ் சுவைகலந்து ஐன்கலந்து உயிக்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே." என்று அதன்சுவையை எடுத்துக்காட்ட முயலுகின்றர். கம்பன் காவியத்தை அனுபவித்த மற்ருெருவர், இம்பர் தாட்டி ற் செல்வமெலாம் எய்தி அரசாண் டிருந்தாலும் உம்பர் தாட்டி ற் கற்பகக்கா வோங்கு நீழல் இருந்தாலும் செம்பெசன் மேரு அனையபுயத் திறல்சே சிராமன் திருக்கதையில் கம்ப நாடன் கவிதையிற்போல் கற்ருேர்க் கிதயம் கனியாதே." என்று அதன் கவிதைச் சிறப்பை எடுத்தோதுகின்ருர், இங்ஙனமே, 'பாரதியும் பட்டிக்காட்டானும்" என்ற 2 ஆளுடைய அடிகள் அருள்மாலை-7 3. கம்பராமாயணத் தனிவன்,