பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையனுபவம் 53 கவிமணியின் பாடல்கள் பா ர தி ய | ரி ன் கவிதைச் சுவையை எடுத்துரைக்கின்றன. 'கண்ணன் காதலன்' எனக்கொரு களிய முதமடா! விண்ண முதமுமே-அதனை வெல்ல மாட்டாதட: என்ற பாடல் கண்ணன் பாட்டு’ என்ற கவிதையை அனுபவித்த கவிமணியின் வாக்கு. இங்ங்ணம் ஒரு சில பாடல்களால், தான் படித்த ஒரு சில கவிதைகளின் அனுபவத்தை விரித்துரைக்கின்ருர் க விம னி. கவிதைகளைப் படித்துச் சுவைக்கும் பழக்கமுடையவர்கள் மேற்கூறிய கவிதையனுபவப் பாடல்களின் பொருளைஅவைகூறும் உண்மையை-நன்கு அறிவர். பாம்பின் கால் பாம்பறியுமன்ருே? - கவிதை இன்னது என்று ஒரளவு அறிந்துகொண்டு அதனைச் சுவைப்பது ஒருவகை; அதனை அறியாமலே சுவைப்பது மற்ருெருவகை. பெறும் அனுபவம் ஒன்றே யாயினும் அவ் வனுபவத்தின் தரத்தில் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். ஒவல்டின் என்ற ஒருவகைப் பானத்தைப் பருகினல் அஃது எல்லோருக்குமே இன்பத்தைத்தான் தரும். என்ருலும், அப் பானத்தில் இன்னின்ன சத்துக்கள் சேர்ந்திருக்கின்றன என்றும், அச் சத்துக்களின் அடிப்படைத் தன்மைகள் இவை என்றும் புரிந்துகொண்டு அதனைத் துய்த்தற்கும், ஒன்றுமே தெரியாமல் ஒவல்டினைப் பருகித் துய்த்தற்கும் வேறுபாடு உண்டு. அவ் வேறுபாடு தரத்தில் உள்ளது. அங்ங்னமே, ஒரு மோட்டார் வண்டியை அதன் பொறி