பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ அறிவுக்கு விருந்து ஒருவித கிளர்ச்சியைத் தந்து கவிதையை அனுபவிக்கத் துணை செய்கின்றன. எந்தமொழியும் குறியீடுகளால் (symbols) ஆனது. சொற்களே இக்குறியீடுகளாம். அச்சொற்களுக்குப் பொருள் உண்டு. எல்லாச் சொற்களும் பொருள் கிணத்தனவே என்ற தொல்காப்பியரின் கூற்றை ஈண்டு நினைவு கூர்க. ஆகவே, சொற்கள் தூண்டலை எழுப்பும் அடையாளங்க (signs) ளாகின்றன நம்முடைய கண்கள் அச்சிட்ட கவிதைகளைப் படிக்கின்றன; அல்லது காதுகள் கவிதையைப் பிறர் படிக்கக் கேட்கின்றன. கவிதையை வாய்க்குள்ளும் படிக்கின்ருேம்; வாய்விட்டும் படிக்கின்ருேம், கண்ணின் மூலமும் காதின் மூலமும் ஏற்படும் துண்டல்கள் நம் மூளையை அடைகின்றன. நாம் கவிதையின் பொருள்களை அடைகின்ருேம். நம் மனத்தில் பல்வேறு எண்ணங்கள் எழுகின்றன. இவை தம்மொடு தாமாகக் கலந்து தொகுதிகளாகிப் பிற எண்ணங்களுக்குக் குறியீடுகளாகின்றன. இவை யாவும் பெருமூளையின் புறணியில் (cerebral cortex) நடை பெறுபவை. நம் மூளையின் ஒரு பகுதியாகிய மேற்பூத் தண்டு (hypo-thalamus) உள்ளக் கிளர்ச்சி நிலையில் பங்குகொள்கின்றது என்பதை ஆய்வுகளால் கண்டறிந் துள்ளனர். உள்ளக் கிளச்சியற்றிப் பல கொள்கை களும் எழுந்துள்ளன. இவற்றையெல்லாம் ஒருங்கு வைத்து எண்ணினுல் ஓர் உண்மை புலனுகின்றது. கவிதையைப்படித்து அதிலுள்ள செய்திகளைப் பெரு மூளை அறிந்ததும் அங்குத் தோன்றும் எண்ணங்களும் எண்ணக் கோவைகளுத் மேற்பூத்தண்டைத் தூண்டி அதன் மூலம் த ன் னு ட் சி நரம்பு மண்டலத்தை (autonomous nervous system) @urégésir psor. Øth மண்டலத்தின் இயக்கத்தால் சுரப்பிகள் தூண்டப்