பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翁爵 அறிவுக்கு விருத்து மாபெருங் கவிஞன். இவர்கள் இயற்றிய கவிதைகட்குத் தத்துவம் உண்டு. இக்கவிதைகளைப் படிப்பவர்கள் அக் கவிஞர்கள் உணர்த்தும் உண்மையில் ஒரளவாவது ஈடுபடுவர் என்பது ஒருதலை. கவிதையின் தத்து வத்தில் கவிதையின் இலக்கணம், கற்பனை, சொல் வளம், ஒலிநயம், யாப்பு முறை, அணிநலன், தொடை தயம், சுவைகள், கவிதை கூறும் உண்மை போன்றவை அடங்கும். இவற்றுள் ஒரு சிலவற்றை ஈண்டுச் சிறிது விளக்குவோம். - கற்பனை கவிதையின் இன்றியமையாத கூறு. இயற்கையைப் பாடும் கவிஞர்களும் உள்ளதை உள்ள வாறு பாடுவதில்லை. தாங்கள் விரும்புமாறு சிலவற்றைக் கூட்டியும் சிலவற்றைக் குறைத்துமே பாடுகின்றனர். இதல்ைதான் அவர்களுடைய கவிதை கலைப்பண்புடன் அழியா வர்ழ்வு பெறுகின்றது. இந்த அடிப்படையில் கவிஞன் தான் காணும் உலகைவிடச் சிறந்ததோர் உல கினேயே படைத்து விடுகின்ருன். சங்க காலத்துப் புலவர் அம்மூவளுர் கடற்கரையருகே உள்ள நாவல். மரத்தருகில் பலவற்றைக் காண்கின்ருர். கருநிற நாவற்பழங்கள் மரத்தின் கீழே உதிர்ந்து கிடக்கின்றன; மரத்தருகே கருநிற வண்டுகள் அங்குமிங்கும் பறந்து செல்லுகின்றன. நிலத்தில் விழும் பழங்களை ஞெண்டுகள் ஓடிச் சென்று தின்கின்றன. நாரைகள் அற்றம் பார்த்திருந்து ஞெண்டுகளைப் பற்றி உண்கின்றன. இக் காட்சிகள் அனைத்தையும், இன்னும் பலவற்றையும் கவிஞர் காண்கின் ருர், ஆளுல், அவற்றுள் சிலவற்றை மட்டிலும் தேர்ந்தெடுத்துத் தம் உள்ளம் விழையுமாறு ஒரு கற்பனை நாடகம் நடத்துகின் ருர், நீர் வாழ் ஞெண்டு ஒரு நாவற்பழத்தைப் பற்றி இழுத்துச் செல்லுகின்றது. அருகே பறந்துகொண்டிருக்கும் வண்டுகள் அக்