பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'அறிவுக்கு விருந்து' என்ற இச் சிறு நூல் ஓரளவு மனப் பயிற்சி வளர்ச்சிக்குத் துணை செய்யும் நோக்கத்துடன் தொகுக்கப் பெறுகின்றது. இது கல்லூரி பாணாக்கர்கட்கும் ஏனைய இளைஞர்கட்கும் நன்முறையில் பயனளிக்கும் என்பது என் கருத்து. இதிலடங்கியுள்ள ஒன்பது கட்டுரைகளில் பெரும்பான்மையானவை பல சமயங்களில் குமரிமலர் (கட்டுரைகள் - 6, 7, 8, 9) தமிழ்நாடு (கட்டுரை-3), தினமணி. (கட்டுரை-5) மணி மொழி கட்டுரை-2) போன்ற இதழ்களில் வெளிவந்தவை. ஏனையவை கட்டுரைகள் -1,4) இந்நூலுக்கென, எழுதப்பெற்றவை.

தமிழ்க் கடல் ராய, சொக்கலிங்கனார் அவர்களைத் தமிழ் கூறு நல்லுகம் நன்கு அறியும். தமிழ் இலக்கியத்தின் ஆழத்தையும் அகலத்தையும் கண்ட மேதை. எவருடனும் இன்முகத்துடனும் எளிமையுடனும் பழகும் பண்புடையாளர். நவில்தொறும் கால் நடத்தைக் காண்பது போல அவருடன்-பழகுந்தொறும் அவருடைய பண்புடைமையைக் காணலாம். யான் 1950-இல் காரைக்குடிக்கு வந்த நாளிலிருந்தே இவரது தமிழ்ப் புலமை என்னை யீர்த்து அடிமையாக்கிக் கொண்டது. காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தில் சனிக்கிழமைதோறும் இவர்கள் அளித்த தமிழ் விருந்தை செவியாரக் கேட்டு உளமார அனுபவித்த யான் இந்நூல் விருந்தை அவர்கட்குப் படைக்கின்றேன். மணிவிழாக் கண்டு தமிழ்க்கடலாகவும் சிவமணியாகவும் திகழும் இவர்களது ஆசியால் இந்நூல் பல தமிழ் இளைஞர்களின் உள்ளங்கட்கும் விருந்தாக அமையும் என்பது என் திடமான நம்பிக்கை.

இந்தூலை வெளியிடுவதற்கு இசைவு தந்த திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தினருக்கு-சிறப்பாக அதனைத் தொடங்கிய நாள்தொட்டு மிக்க ஈடுபாட்டுடன் கண்காணித்து வரும் அதன் துணைவேந்தர்