பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அறிவுக்கு விருத்து என்ற பாடல்களில் குழைவான சொற்களும் ஒலிகளும் வருவதைக் காண்க: அச்சுவடிவத்தில் காணும் பாட்டு அரையுயிரோடு தான் உள்ளது. அதைப் பாடிய கவிஞர் இப்பொழுது தம்மிடையே இல்லை. அவர்தம் பாட்டில் தம்முடைய மூகக் குறிப்பையும், கையசைவுகளையும் விட்டுச் செல்ல இல்ல; அங்ங்னம் விட்டுச் செல்லவும் இயலாது. ஆனல் ஒலிநயம், மோனே. எதுகைபோன்ற கூறுகளடங்கிய யாப்பு முதலியவற்றை அவற்றின் சாயல்களாக விட்டுச் சென்றுள்ளார். கவிஞருடைய உணர்ச்சியை நாம் பெற வேண்டுமாயின், அச்சுவடிவத்தில் காணும் அவருடைய சொற்களிலிருந்து மட்டிலும் பெறுதல் இயலாது. அச்சு வடிவத்தில் காணும் அவரது பாடல் புகைப்பட நெகட்டிவ் போன்றது: நெகட்டிவிலிருந்து படத்தைத் தெளிவாகக் காண இயலாது. படத்திலுள்ள பொருள் களின் சாயல்களே அதில் இருக்கும். தக்க துணைப் பொருள்களைக்கொண்டு அத்த நெகட்டிவ்விலிருந்து படத்தை அச்சிட்டால்தான் பொருள்களின் படம் தெளி வாகப் புலணுகும். அங்கணமே, கவிதையைப் பாடிய கவிஞன் விட்டுச்சென்ற சாயல்களிலிருந்து படிப்பவர், பாட்டை யாத்தவரின் உணர்ச்சியை உண்டாக்குதல் வேண்டும். அங்ங் ன ம் உண் ட க்கு வ த ற் கு மேற்கொள்ளப்பெறும் முயற்சி நெறியோடு அமைந்தால் விரும்பிய பயன் கிடைக்கும். இராமாயணம், பாரதம் பெரிய புராணம் போன்ற காவியங்களைத் தலைமுறைத் தலைமுறையாகப் படித்து மக்கள் ஒரேவகையான உணர்ச்சியைப் பெற்று வருவதை இதற்குச் சான்ருகக் கொள்ளலாம். இளவேனிற் காலத்தில் திரும்பி வருவதாகக் கூறித் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ருன். இளவேனிற்