பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையனுபவம் 71 பிறரால் இகழப்பட்டு எளிய ராதல். இழவு என்பது தந்தைதாய் முதலிய சுற்றத்தாரையும், இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவு என்பது முன்னைய நல்ல நிலைமை கெட்டு வேறுபட்டு வருந்துதல். வறுமை என்பது போகந் துய்க்கப்பெருத பற்றுள்ளம். இவை நான்கும் தன் கண் தோன்றினும் பிறர்கண் தோன்றினும் அழுகையாம். தன் கண் தோன்றிய இழிவு பற்றிப் பிறக்கும் அவலத்தை அழுகை என்றும், பிறர் கண் தோன்றிய இழிவுபற்றிப் பிறக்கும் அவலத்தைக் கருணம் என்றும் கூறுவர் பேராசிரியர். உான் நெரிந்து விழஎன்ளே யுதைத்துருட்டி மூக்கரித்த நான் இருந்து தோள்பார்க்க நான்கிடந்து புலம்புவதோ? கரன் இருந்த வனம் அன்ருே? இவைபடவும் கடவேனுே? அான் இருந்த மலை எடுத்த அண்ணுவோ! அண்ணுவோ!' என்ற பாடலில் தன்கண் தோன்றிய அவலம் காண்க. சூர்ப்பண்கையின் நிலையைக் கண்டு அவனது நிலைக்கு ஒருவர் இரங்குவதாக ஒரு பாடலை அமைத்தால் அது பிறன்கண் தோன்றிய அவலமாகும். கவிதையின் பல கூறுகளுள் சுவை மிகவும் நுட்பமானது; கவிதையின் உயிர்நாடியும் அதுவே. கவிதையனுபவம் ஏற்படுவ தற்கு இது மிகவும் இன்றியமையாதது. - தமிழ்க் கவிதைகளைப் பொறுத்தமட்டிலும் கவிதை யுண்மைதான் கவிதைக்கு ஓர் உயர்ந்த தரத்தை நல்குகின்றது. கவிஞன் கூறும் உண்மை நாம் உலகில் 17-ஆரணிய-சூர்ப்பனகைப்-109