பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கவிதையும் கற்பனையும்: கிரிதோ ஒருவகையான உண்மையை அடிப்படை யாகக்கொண்டு செஞ்சொற்களால் உள்ளங் கவரும் முறையில் உயர்ந்த கவிதையை உண்டாக்குபவனே கவிஞன். இளங்கோ ஒரு கவிஞன், கம்பன் ஒரு கவிஞன்: சேக்கிழார் ஒரு கவிஞர். உலகிற்கே மாபெரும் உண்மைகளை உணர்த்திய வள்ளுவன் ஒரு மாபெருங் கவிஞன். இவர்கள் இயற்றிய கவிதைகட்குத் தத்துவம் உண்டு. கவிஞன் தான் பெற்ற உணர்ச்சிகளைத் தன் கவிதைகளைப் படிப்போரும் பெறவேண்டும் என்று எண்ணிச் சில யுக்திமுறைகளைக் கையாண்டு கவிதை யைப் படைக்கின்ருன். அந்த யுக்தி முறைகளால்தான் உணர்ச்சியை அதில் பொதிய வைக்கின்ருன் உள்ளத் திலுள்ள அவற்றை உணர்ச்சி பொங்கத் தெள்ளத் தெளிந்த சொற்களால் எடுத்துரைப்பதுதான் கவிதை யாகும். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையும், 'உள்ளத் துள்ளது கவிதை-இன்பம் உருவெ டுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தமிழில் தெளிந்து ரைப்பது கவிதை'

  • தினமணி புத்தாண்டு சிெல் 62 வெளிவந்தது. 1. மலரும் மாலையும்-கவிதை 7