பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - அறிவுக்கு விருத்து போல் ஒளியைக் காண்கின்ருேம்; மலை, முகில் அல்லது மலரின் அழகினைப் பார்க்கின்ருேம். ஆனல், அவற்றைக் கவிஞன் ஒளிவீசும் அழகுடன் பொலிவதைக் காண் கின்ருன்; அப் பொலிவு அவன் உள்ளத்தைக் கவர்ந்து களிப்பால் அவனைக் கூத்தாடச் செய்கின்றது; திரும்பவும் அப்பொருளை அக்கறையாகப் பார்க்க நம்மைத் தூண்டு. கின்றது. இன்னும் நாம் ஓர் அருவியின் இசையின் எதிரொலியை அரைச் செவிடன்போல்தான் கேட்க முடிகின்றது. ஆனல், கவிஞன் அதன் முழு இசை வினிமையையும் நுகர்ந்து நம்மையும் அதனைக்கவனமாக நோக்கி அதனைப் பெறச் செய்கின்ருன். தொலைவிலுள்ள உடுக்கள், கோள்கள் ஆகியவற்றின் இசையையும் கேட்டு தமக்கு உணர்த்த வல்லவன் கவிஞன். இயற்கை யின் சூக்குமமான இசைகளையும் அவன் கூரிய காது களால் கேட்கமுடிகின்றது, அறிவியலறிஞனும் கான முடியாத வாழ்க்கையுண்மைகளும் அற்புத நிகழ்ச்சிகளும் கவிஞனுக்குப் புலனுகின்றன. நம்மில் பலர் இவ்வுலகி லுள்ள எண்ணற்ற அழகின் பங்களைக் கண்டும் கேட்டும் நுகர இயலாதவர்களாய்க் காலங் கழிக்கின்றனர். பலர் கண்ணிருந்தும் காணுமல், காதிருந்தும் கேளாமல், அழகின்பத்தைப் பொறுத்தவரையில் குருடர்களாய்ச் செவிடர்களாய் வாழ்கின்றனர். அந்த அழகின்பத்தைக் கண்டு அனுபவித்த பாரதி, எத்தனைகோடி இன்பம் வைத்தாய்-எங்கள் இறைவா! இறைவா! இறைவன: சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்குச் சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாய் அத்தனை உலகமும் வண்ணக் களஞ்சியம் ஆகப் பலப்பலதல் அழகுகள் சமைத்தாய்.” ,ே பாரதியாரின் பாடல்கள்-இறைவா! இறைவர்.