பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 அறிவுக்கு விருந்து வில்லெனக் கிடந்த புருவம்; வில்லின் அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண்; பிறையெனச் சுடரும் சிறுநுதல்; பிறையின் நிறையெனத் தோன்றும் கறையில் வாண்முகம்; அகவென நுடங்கும் மருங்குல்; அரவின் மையெனக் கிடந்த ஐதேந் தல்குல்; கிளியென மீழற்றும் கிளவி, கிளியின் ஒளிபெறு வாயின் அன்ன ஒள்ளுகிர்; வாழையந் தாளுறழ் குறங்கின் வாழைக் கூம்புமுகி ழன்ன வீங்கின வனமுலை; வேயெனத் திரண்ட மென்ருேள்; வேயின் விளங்குமுத் தன்ன துனங்கொளி முறுவல்; காந்தள் முகிழன்ன மெல்விரல்; காந்தள் பூத்துடுப் பன்ன புனைவளை முன்கை; அன்னத் தன்ன மென்னடை . . இது கேசாதி பாத வருணனை. இதில் கவிஞன் தான் பல சமயங்களில் கண்டவற்றை ஒருங்கு சேர்த்துப் புதிய உருவத்தைப் படைத்திருப்பதால் இது படைப்புக் கற்பனையாகும். பறவைகள் குஞ்சு பொரிப்பது நாம் நாள்தோறும் காணும் காட்சி. மக்கள் நாள்தோறும் கூற்றின் வாய்ப்படு வதையும் நாம் காணுமல் இல்லை. இந்த இரண்டு காட்சி களையும் அடிக்கடிக் கண்ணுறும் நம் உள்ளத்தில் எந்த விதமான புதியகருத்தும் எழுந்ததில்லை; எழுவதுமில்லை. வள்ளுவப் பெருமானின் கருத்தில் அக்காட்சி என்ன கருத்தினை எழுப்பிவிட்டிருக்கின்றது பாருங்கள். குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு." 8. பெருங்கதை-4-11:54.79 9, குறள் 338