பக்கம்:அறிவுக்கு விருந்து.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 87 பறவைகள் குஞ்சு பொரிப்பதும் மக்கள் இறந்துபடும் நிகழ்ச்சியும் ஒன்று சேர்ந்து-இயைபுற்று-உயர்ந்த தோர் உண்மையையல்லவா விளக்கி நிற்கின்றன்! இதில் பறவைகள் குஞ்சு பொரிக்கும் காட்சி கவிஞனது உணர்ச்சியைத் தூண்டவில்லை. ஆளுல், அவன் உள்ளத்தில் படிந்து கிடந்த நிலையாமை என்ற உணர்ச்சியே பறவை குஞ்சு பொரிக்கும் காட்சியை நினைப்பூட்டியது. அவ் வுணர்ச்சிதான் த ன க் கு ப் பொருத்தமான பிறிதொரு காட்சியை நினைவுக்குக் கொணர்ந்து முன்னரே படிந்திருந்த உணர்ச்சியைக் கலையாக மலரச் செய்தது. புறஉலகில் காணும் நிகழ்ச்சி அகத்தில் அடங்கிக் கிடக்கும் உணர்ச்சியைத் தூண்டு கின்றது என்ருலும், பெரும்பாலும் உள்ளனுபவமே (inner experience) அத்தகைய உணர்ச்சியைக் கிளர்ந் தெழச் செய்கின்றது என்று சொல்லலாம். எனவே, கற்பனையாற்றலைத் தூண்டுவதற்கு உள்ளத்தில் அடங்கி யிருக்கும் உள்ளனுபவமே துரண்டுகோலாக அமை கின்றது என்பது தெளிவாகின்றது. இத்தகைய கற்பனைதான் இயைபுக் கற்பனையாகும். இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்ற கவிஞன் தான் கண்டவற்றை அப்படியே கூருது அக்காட்சி களால் தன் உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை மட்டிலும் சித்திரிப்பது கருத்து விளக்கக் கற்பனையாகும். உலக வாழ்வில் கேடும் ஆக்கமும், இறப்பும் பிறப்பும் மாறிமாறி வந்துகொண்டிருப்பதைச் சங்கப்புலவர் ஒருவர் காண்கின்ருர், ஒருநாள் வானத்தில் திங்களை உற்று நோக்கிக்கொண்டிருந்த அவருக்கு அத்திங்களின் வாழ்விலும் கேடு, ஆக்கம், மறைதல், பிறத்தல் ஆகியவை இருத்தல் நினைவிற்கு வருகின்றன. இந்த உண்மையை உணர்த்துவதற்காகத்தான் அறியாத