பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


உடனே மடாதிபதி புன்னகையுடன் அவர்களைப் பார்த்து, “இவ்வளவு தூரம் நீங்கள் பல்லக்கையும், என்னையும் சுமந்துவந்து இங்கே இறக்கிவிட்டு, இப்போது தேடுவதை அப்போதே தேடியிருக்கலாமே!” என்றார்.

அவர்கள் வெட்கித் தலைகுனிந்து கன்றைத் தேடப் புறப்பட்டனர்.

இப்படிப்பட்ட வேலையாட்களும் உண்டு.


67. உள்ளுர் நிலைமை

தன்னை விந்து பார்க்கும்படி அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனுக்குக் கட்டளையிட்டிருந்தார் மாவட்ட ஆட்சியாளர். அவர் போய்ப் பார்க்கவில்லை. கடுமையான கோபத்துடன் அப் பஞ்சாயத்து போர்டு தலைவரை அழைத்துவரச் செய்து, ‘ஏன் வரவில்லை’ எனக் காரணம் கேட்டார் மாவட்ட ஆட்சியாளர்.

அதற்கு அவர் சொன்னார். “நான் எப்படி வரமுடியும். எங்க ஊரில் இஞ்சினீயர், தான் கட்டிய வீடு இடிந்து விட்டதே என்று அழுகிறார். டாக்டருக்கே காய்ச்சல் வந்து என்ன செய்வது என்று கதறுகிறார்.

“இதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, பள்ளிக்கூட வாத்தியார் தம் பிள்ளைகள் மூவருமே வகுப்பில் தேறவில்லையே. நான் என்னசெய்வேன் என்று என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுகிறார். ஊர் இப்படி இருக்கிறதனாலே நான் வரமுடியவில்லை. என்னை மன்னிக்கனும் எஜமான்” என்று பணிவோடு வேண்டிக் கொண்டார்.

அதற்கு ஆட்சியாளர் கேட்டார். இது உங்கள் ஊரில் மட்டும்தானா நடக்கிறது; நாட்டில் எல்லா இடங்