பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அது வல்ல; இது—என்றார்.

அன்று வள்ளுவரால் ‘ஈகையின் சிறப்பு’ ஊரார் எல்லோர்க்கும் உணர்விலே தைத்து ஊன்றியது. பின் ஈத் துவக்கும் இன்பத்திலே திளைத்து வாழ்ந்தனர்.

நாம் இன்றுதான் உணர்கின்றோம். நாம் அப்படி வாழ்கின்றோமா? இனியேனும் வாழ்வோமா?

—எனச் சிந்திக்கச் செய்கிறது. இக் குறள்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் — குறள்


வார்ப்புரு:Xx—larger

பள்ளி வாசல் கட்டவேண்டுமென்று எண்ணிய மவுல்வி நபி நாயகமவர்களிடம் சென்று பொருள் வேண்டு மென்று கேட்டார். அவர் ஒரு செல்வனைக் குறிப்பிட்டு அவனிடம் கேட்டுப் பெறும்படி அனுப்பினார்.

அப்படியே மவுல்வியும் செல்வனைக் காணச் சென்ற போது, அங்கே —

“வேலைக்காரனைக் கையை மடக்கி மரத்தில் வைத்துக் கட்டி—குத்து 10 குத்திக் கொண்டிருந்தான் செல்வன். ‘ஏன் இப்படி’—என்று அருகில் உள்ளவரைக் கேட்க,

“வேலைக்காரன் கடையில் பருப்பு வாங்கி வரும் போது வழியில் 10 பருப்பு சிந்திவிட்டானாம், அதற்காக 10 குத்துகள் அவனைக் குத்திக் கொண்டிருக்கிறான் செல்வந்தன்” என்றான்.

—இது கேட்டதும், மவுல்வி பயந்து, பணம் கேட்காமலே திரும்பி வந்து விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/14&oldid=962617" இலிருந்து மீள்விக்கப்பட்டது