பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147


அழைத்துக் கொண்டுபோய் பழையபடி நின்றாள். “நீங்கள் யாரம்மா என்றார்கள் நாயகம் அவர்கள். மூன்று நாட்களுக்கு முன்பே, இந்தப் பையன் சர்க்கரை சாப்பிடுகிறான்; கொஞ்சம் புத்தி சொல்லுங்கள் என்று சொன்னேனே! நான்தான் என்றாள். ‘ஒ அவனா? தம்பி! இனிமேல் நீ சர்க்கரை சாப்பிடாதே போ” என்றார்கள். அந்த அம்மாவுக்கு சிறிது வருத்தம். “இவ்வளவுதானா? இதைச் சொல்லவா மூன்று நாட்கள். இதை அன்றைக்கே சொல்லியிருக்கலாமே!” என்று கேட்கவில்லை. நினைத்தாள். அவ்வளவுதான்

உடனே நாயகம் அவர்கள், தாயே! நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரிகிறது. உன் பேரன் மட்டு: சாக்கரை சாப்பிடுகிறனன் அல்ல; நானும் அதிகமாகச் சாப்பிடுகிறவன். மூன்றாம்நாள் விட முயன்றேன்: முடிய வில்லை, நேற்று விடப்பார்த்தேன். பாதிதான் முடிந்தது. இன்றைக்கு முயன்றேன்; சக்கரையே சாப்பிடவில்லை; என்னால் அதை விட முடிந்தது. அதனாலேதான் அறிந்தேன்; சர்க்கரை சாப்பிடுவதை விடமுடியும் என்று. அதன் பிறகுதான் பையனுக்கு என்னால் சொல்ல முடிந்தது என்றார்கள்.

இது நம் உள்ளத்தைத் தொடுகிறது. தொட்டு என்ன பயன்? நம் நாட்டில் உள்ள பேச்சாளர்களின் உள்ளத்தைத் தொடவேண்டும். நபிகள் நாயகம் அவர்கள் எதைச் சொல்லுகிறார்களோ, அதையே அவர்கள் செய்வார்கள். செய்யக் கூடியதை மட்டுமே சொல்லுவார்கள். செய்துகொண்டே சொல்லுவார்கள்.

இப்பழக்கம் நம்நாட்டில் பரவுவது நல்லது.