பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66


கிளி : நீங்க போகிற காட்டிலே இப்படியெல்லாம் உங்க கிட்ட நடந்துக்க மாட்டாங்களா, என்ன?

ஒநாய் : அந்தக் காட்டிலே இருக்கிற புலி சிறுத்தை யெல்லாம் என்னைக் கண்டதும் தடவிக் கொடுக்குது; மானும் முயலும் என்னோடு ஓடி விளையாடுது.

கிளி : அப்படியா? அப்படியானால் நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேள் அண்ணே! “உன் விஷப்பற்களையும், கூர்மையான நகங்களையும் இங்கேயே, இந்தக் காட்டிலேயே கழட்டி வைத்துவிட்டுப் போ!”

ஒநாய் : அதையெல்லாம் இங்கே கழட்டிப்போட்டு விட்டு போனால், அந்தக் காட்டிற்குப்போய் நான் என்ன பண்ணுவேன்?

கிளி : அப்படி நீ செய்யவில்லையானால், வெகுசீக்கிரத்தில் அந்தக் காடும் இந்தக் காடு மாதிரியே ஆகிவிடும் என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது கிளி.

இதிலிருந்து காட்டின்மேல் எந்தத் தப்பும் இல்லை; ஒநாய் நடந்துகொள்ளும் முறையில்தான் தப்பு இருக்கிறது என்று அந்தக் கிளி செல்லாமல் சொல்லிவிட்டது. நமக்கும் இது ஒரு படிப்பினை அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/68&oldid=962691" இலிருந்து மீள்விக்கப்பட்டது