பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வார்ப்புரு:X—larger
 


37. அக்கால இசையறிவு


ஐம்பது ஆண்டுகட்கு முன், தமிழகத்திலே சிறந்து விளங்கிய இசையறிஞர்

காஞ்சிபுரம் நாயனா பிள்ளை,
பிடில் கோவிந்தசாமி பிள்ளை,
மிருதங்கம் அழகு நம்பியா பிள்ளை,
கஞ்சிரா தக்ஷனா மூர்த்தி பிள்ளை,
கொன்னக்கோல் மன்னர்குடி பக்கிரிசாமி பிள்ளை,

இப்படிப்பட்ட இசைமாமேதைகள் சேர்ந்த இசையமைப்பு ஒருசமயம் நடந்தது—அதுபோன்ற அமைப்பு அவர்கள் காலத்துக்கு முன்பும். அவர்கள் காலத்திலும், அதற்குப் பின்பும் அமைந்ததில்லை.

அத்தகைய இசையரங்கு நிகழ்ச்சி — நாமக்கல்லிலிருந்து மோகனூர்க்குப் போகும் நெடுஞ்சாலையிலே, மாலை 6 மணிக்கு நடந்து கொண்டிருந்தது. பெரிய மண்டபம்; மேடையில் கூட்டம் அதிகமாகக் கூடியிருந்தது

அதுநெடுஞ்சாலை வழி —

அந்த ஊர்ப் பக்கத்து — பணக்காரர் ஒருவர் — சலங்கை கட்டிய இரட்டை மாட்டு வண்டியில் அமர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/69&oldid=962692" இலிருந்து மீள்விக்கப்பட்டது