பக்கம்:அறிவுக் கதைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


“என் கணவர் உங்கள் வங்கியில் வாங்கிய 10 ஆயிரம் ரூபாயை நாளை கட்டவேண்டுமாமே! அவரிடம் கையில் பணம் இல்லை. யார் யாரையோ கேட்டுப் பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. அவரால் நாளைக்கு அந்தப் பணத்தைக் கட்ட முடியாது. இதை சொல்விப் போகத் தான் வந்தேன்” என்று, அவரிடம் சொல்லிவிட்டு வந்து, தான் வீட்டில் நுழைந்து கதவைச் சாத்திவிட்டு வந்து, கணவரிடம்—

“இனி அவன் தாங்க மாட்டான். நீங்கள் தூங்குங்கள்” என்று சொன்னாள், சுடமை தவறாத அன்பு மனைவி.


53. மாப்பிள்ளை தேடுதல்!

முப்பது வயதான தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப் புறப்பட்ட ஒர் அந்தணனுக்கு கட்டுச் சோறு கட்டிக்கொடுத்து வழியனுப்பினாள் அவன் மனைவி.

நடையாய் நடந்து, அலைந்து அலுத்துப்போய், ஒரு வீட்டுத் திண்ணையிலே அந்தணன் தங்கியபோது, தன் கவலையையெல்லாம் அந்த வீட்டுக்காரனிடம் சொன்னான். அது கேட்ட அவன், “எனக்கு ஒரு மகன் இருக்கிறான். வயது 32 ஆகிறது. வரதட்சணை எல்லாம் வேண்டாம். உன் பெண்ணை அவனுக்கு மண முடிக்கலாம்” என்றான்.

அவனும் அகமகிழ்ந்து ‘சரி’ என்றான். அப்போது வீட்டுக்காரன் “ஒன்று மட்டும் சொல்லிவிடுகிறேன், பின்னால் பழி சொல்லாதே. என் மகன் வெங்காயம் சாப்பிடுவான்” என்று சொன்னான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவுக்_கதைகள்.pdf/90&oldid=962715" இலிருந்து மீள்விக்கப்பட்டது