பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

111



609.புகழில் பேராசையுடைமை புகழுக்குத் தகுதியில்லை என்பதையே காட்டும்.

ப்ளூட்டார்க்

610.தகுதியில்லாப் புகழுரை மாறுவேஷம் பூண்ட பழியேயாகும்.

போப்

611.புகழுரையின் மதிப்பு அதை உரைப்போன் கையாளும் முறையைப் பொறுத்ததாகும். ஒருவன் கூறினால் புகழுரையாகத் தோன்றுவது மற்றொருவன் கூறும் பொழுது இகழுரையாகத் தோன்றும்.

மாஸன்

612.இகழ்வதற்கு வேண்டிய அறிவைவிட அதிகமான அறிவு, சரியான முறையில் புகழ்வதற்கு வேண்டியதாகும்.

டிலட்ஸன்

613. மனமுவந்து புகழாதவர் மட்டமான அறிவுடையவர் ஆவர்.

வாவனார்கூஸ்


26. நிந்தனை

614.“இகழ்தல்”—அதனோடு விளையாடினால் ஆபத்து; அதனோடு வாழ்ந்தாலோ அழிவேதான்.

கார்லைல்