பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

அறிவுக்



891.உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.

வோர்ட்ஸ்வொர்த்

892.கவிச்சுவையும் உணர்ச்சியும் பொருந்திய இலக்கியங்களே தினசரி உபயோகத்திற்குத் தேவை.

ஹாரிஸன்

893.உயர்ந்த லட்சியங்களுக்காக உத்தம புருஷர்கள் அனுபவிக்கும் இன்பத்தையேனும் துன்பத்தையேனும் உணர்ச்சி உண்டாக்கும் சிறந்த முறையில் வெளியிடுவதே உண்மையான கவிகள்.

ரஸ்கின்

894.இலக்கிய ஊழியர் மட்டுமல்ல, எந்தப் பொது ஜன ஊழியரும் எளிய முறையிலேயே வாழவேண்டும் என்பது என் அபிப்பபிராயம்.

வோர்ட்ஸ்வொர்த்

895.தன் வாழ்வில் ஒருமுறையேனும் கவிஞனாய் இருந்திராதவன் துர் அதிர்ஷ்டசாலியே.

லாமார்ட்டைன்

896.அனாவசியமாக அதிகமாயிருப்பவற்றை அகற்றுவதே அழகு எனப்படுவதாகும்,

மைக்கேல் ஆஞ்சலோ

897.அழகுடைய பொருள் அந்தமில் ஆநந்தம் ஆகும்.

கீட்ஸ்