பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

அறிவுக்



ஹெர்ஷல்

916. எந்தச் சந்தர்ப்பத்திலும் உதவியாயும், எப்பொழுதும் இன்பம் தருவதாயும், இன்னல்களுக்கு ஒரு கேடயமாயும் உள்ள ஒரு சுவையை வேண்டிப் பிரார்த்திப்பதானால்—“நூல் கற்கும் சுவை” யையே வேண்டுவேன். இந்தச் சுவையும் அதை அனுபவிப்பதற்கு வேண்டிய சாதனங்களும் பெற்றுவிட்டால் ஆனந்தத்திற்கு ஒரு நாளும் குறை வராது.

ஹெர்ஷல்

917.இக்காலத்தும் அற்புதங்கள் நிகழ்வதில்லையோ? நூல்கள் மக்கள் மனத்தை வயப்படுத்துகின்றனவே.

கார்லைல்

918. என்னையா ஏழை என்று கூறுகிறாய்? என்னிடமுள்ள நூல்கள் இராஜ்யத்திலும் உயர்ந்தன அல்லவோ?

ஷேக்ஸ்பியர்

919.தான் படிக்கக்கூடிய அளவு நூல்களை வாங்க முடியாதவன் தரித்திரம் மிஞ்சியவனாகவே இருக்க வேண்டும்.

ஆவ்பரி

920.இதயத்திலிருந்து உதிக்கும் நூலே இதர இதயங்களையும் கவர வல்லது. அது முடியுமானால் வேறு கலைத்திறமை எதுவும் அவசியமில்லை.

கார்லைல்