பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

171



966.நல்ல சுவையறிவு குணங்களைக் காணும், நியாயமான சுவையறிவு அவற்றின் அளவைக் கணிக்கும்.

பழமொழி


60. நூலியற்றல்

967. எந்த நூல், ஆக்கியோன் இரத்தத்தால் ஆக்கப் பட்டிருக்கிறதோ அந்த நூலே எனக்குப் பிரியம்.

நீட்சே

968.ஆசிரியன் தன் நூலில் தன் ஆன்மாவைக் காட்டும் அளவே அவன் நமக்கு அவசியம் ஆவான்.

டால்ஸ்டாய்

969. கலைஞன் பேசுவது நம் அறிவோடன்று, மனத்தில், நாம் தேடாமல் கிடைத்த அம்சமொன்றுண்டு. அதனாலேயே அது அழியாதது. அந்த அம்சத்தோடு தான் கலைஞன் பேசுவான். அன்பு அழகு அச்சரியம் ஆநந்தம் இந்த உணர்ச்சியே அது.

கோன்ராட்

970.நல்ல விஷயம் என்று எண்ணி நான் பாடுவதில்லை. என் மனோநிலைமை அல்லது என் வாழ்வில் ஏற்பட்ட சம்பவம், அதுவே என் பாடல்களுக்கு உற்பத்தி மூலம்.

இப்ஸன்