பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

அறிவுக்



62. உரைநடை
ஷில்லர்

982. ஆசிரியனுடைய உரைநடை அவனுடைய மனத்திற்குச் சரியான நகலாகும்.

கதே

983.இயற்கையான உரைநடையைக் கண்டால் ஆச்சரியமும் ஆநந்தமும் உண்டாகின்றன. அதற்குக் காரணம் அதில் எதிர்பார்க்கும் வண்ணம் ஆசிரியன் ஒருவனைக் காணாமல் மனிதன் ஒருவனைக் காண்பதே யாகும்.

பாஸ்கல்

984.ஆசிரியன் எதை எழுதாமல் விடுக்கின்றானோ அதைக்கொண்டே அவன் திறமையை நிர்ணயிக்க முடியும்.

ஷில்லர்

985.உரைநடையின் மொழிகள் கவனத்தைக் கவருமானால் அந்த உரைநடை தவறானது. பெரியோர் நூலில் எத்தனை பக்கங்கள் படித்தாலும் உரைநடையின் மொழிகளில் கவனம் செல்லாதிருக்கும்.

கோல்ரிட்ஜ்

986.உரைநடை எழுத விரும்பினால் உரைப்பதற்கு ஏதேனும் விஷயமிருத்தல் இன்றியமையாததாகும். ஆனால் விஷயம் ஒன்றுமில்லாதவனும் செய்யுள் செய்து விட முடியும்.

கதே