பக்கம்:அறிவுக் கனிகள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கனிகள்

15



39. ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு—நாம் செய்யும் நற்செயலே அது.

மேட்டர்லிங்க்

40. நல்ல விஷயங்கள் தீய விஷயங்கள் என்று பிரிக்க முடியாது. நாம் அவற்றின் வசப்படாமல், அவை நம் வசம் வந்துவிட்டால் எல்லாம் நல்ல விஷயங்களே.

எட்வர்டு கார்ப்பென்டர்

41. எல்லா நல்ல காரியமும் பேச்சும் பணம் பெறாமல் செய்யப்பட வேண்டும் என்பதே இறைவன் திருவுளம் என்பது தெளிவு.

ரஸ்கின்

42. என்ன செய்யலாம் என்று வக்கீல் கூறுவது விஷயம் அன்று; என்ன செய்யவேண்டும் என்று அறிவும், அறமும், அன்பும் கூறுவதே விஷயம்.

பர்க்

43. அற வாழ்வின் அளவுகோல் விசேஷ முயற்சிகள் அல்ல; தினசரி வாழ்க்கையேயாகும்.

பாஸ்கல்

44. மனத்தைத் தவிர குறையுள்ளது இயற்கையில் வேறு கிடையாது. அன்பில்லாதவரே அங்கவீனர். அறமே அழகு. அழகான மறம் முலாம் பூசிய சூனியப் பேழையாகும்.

ஷேக்ஸ்பியர்

45. விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்கத் தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு நன்னெறியில் செலுத்தப்படும் அன்பே அறமாகும்.

ஸெயின்ட் அகஸ்டைன்