பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 113

தேவூர் என்க. 1-2-ம் அடிகள் தேஆர்ச் சிறப்புக் கூறியது. மஞ் ஞை- மயில். அரி - வண்டு கோடல் - காந்தள்யூ. சேடு - அழகு. திருத்தேஆர்:-நாகபட்டினத் தாலுகாவிலுள்ள சிவஸ்தலம்.

5. தாளம் - முத்து. வலஞ்சுழிவாணன் - கிருவலஞ் சுழி யில் வாழ்பவன். வாணன், வாழ்நன், மரூஉ, இத்தவம் கும்பகோ னம் தாலூகாவிலுள்ளது. ஆதரித்து - பூசித்து. செஞ்சமே, வலஞ் சுழிவாணனை வழிபடுதற்கு என்ன புண்ணியம் செய்தனே எனச் சுருங்க உரைத்துக்கொள்க.

6. முழவு - மத்தளவாத்தியம். வட்டணை- தாளம். கட மாடி - கடமாடும் சிவபெருமான். பட்டம் தைல் - பட்டமணிந்த கெற்றியிலே. கட்டுமலர் - கட்டித் தொங்கவிட்ட மலரில், மட் மெலி - தேன் கிறைந்த, பாவை - உமாதேவி, சட்டகலே - கிருத் தமான சாஸ்திரங்கள், எட்டு மருவு எட்டு - (8 + S) அறுபத்து நான்கு.தத்தை-கிளி.சட்டம்-செப்பமுணர்த்தி நிற்பகோர் இடைச் சொல். மூன்ருவது, நான்காவது அடிகளில் கிளிகள் அறுபத்து நான்கு கலைகளையும் தம் சொல்லாற் சொல்விப் பழகும்படியான சண்டை நகர்’ என்று சண்பை நகரத்துக் கல்விச் சிறப்புக் கூறி யது. சண்பை - சீகாழி. முழவு கொட்ட என மாறுக.

7. மங்கையர்க்காசி - பாண்டியன் தேவியின் இயற்பெயர். வளவர் கோன் - சோழன். பானை, உவமையாகு பெயர். மானி. பெண். பங்கயச் செல்வி - திருமகள் போன்றவள். பங்கயம் , தாமரை; பங்கஜம் என்ற வட சொற்றிரிபு. (பங்கம் - சேற்றில். ஜம் - முளைப்பது.) பாண்டிமாதேவி - பாண்டிய நாட்டுக் கோப் பெருந்தேவி. அம்கயற் கண்ணி - அழகிய மீன் போன்ற கண் களை யுடையவள். (மீனகதி) ஆலவாய் - மதுரை.

8. கனல் - மழு, பயிர் காட்டும் புயலான் பயிர் முளைத் தற்குக் காரணமான மேகமாயுள்ளவன். துதலானும் என்பது முதலியவற்றைக் காட்டும் கொடியானே என்பதனேடு முடித்துக் கொள்க. வெண் காடு-சுவேதாரணியம்; இது சீகாழித் தாலூகாவில் காவிரிப்பூம் பட்டினத்துக்கு மூன்று மைல் தளத்திலுள்ளது.

8