பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை 125.

8. கோன் ஆக - இந்திரன . சசி. இந்திராணி. சென் முேன் - குஷன் என்னும் அரசன். குறுகாமே - அவளிடம் செல்லாமலே. மால் நாகம் - பெரிய (மலைப்) பாம்பு. ஆ-ை குறையாக, குண...குன்று - சற்குண மலை, (சலியாமையும் பெரு மையும் பற்றிக் குணத்தைக் குன்றென்றார். வெகுளி - கோ பம், கனம் - கூடினப்பொழுது. (கன்னிமைப் பொமுது) நின் முர் - கின்ற முனிவர்கள். காத்தல் - தடுத்தல்.

கதை:-சக்தி வம்சத்து நகுவடினென்பான் நூறு அசுவமேத யாகங்கள் புரிந்து இந்திர பதவியை யடைந்து வழக்கப்படி அகஸ்" தியர் முதலிய சப்த ரிஷிகள் பல்லக்குத் தாங்கச் சென்றவன் இந்திராணியை விரைந்து காண வேண்டு மென்னும் காம இச்சை யால் முனிவர்களை விரைந்து செல்லுங்களென்னும் பொருள்பட "ஸர்ப்ப ஸர்ப்ப' என்ருன். அகஸ்திய முனிவர் முனிந்து நீ ஸர்ப்ப லர்ப்ப என்றமையால் ஸர்ப்பமாகக் கடவை” எனச் சபித்தார். உடனே அவன் மலைப்பாம்பாய் வீழ்ந்தான்். விரிவை மகாபாரத முதலியவற்றுள் காண்க,

4. காலால் - (செருப்புப் பூண்டிருக்க) காலால், வாலிது - பரிசுத்தமானது. சாலும் - சிறந்ததாகும். மாசு - (தீயன சிந்திக் கும்) குற்றம். இலன் ஆதல் - இல்லாதவகுைக. அனைத் தி அறன் - அவ்வளவே தருமம் என்பது. பிற - ஏனைய சொல்லள விலும் வேஷ மாத்திரத்திலும் வெளிப்படுத்தும் அறங்கள். ஆகுல நீர. ஆடம்பரத் தன்மை யுடையனவாம். சே - கீர்மை என்னும் பண்படிக்குறிப்பு முற்று. கண்ணப்பு: உடுப்பூரில் வேடர் குலக் தில் நாகன் என்பானுக்குப் புத்திானுய்ப் பிறந்து கிண்ணன் என் னும் பிள்ளைப் பெயர் பூண்டிருந்தவர். வேட்டைக்குச் சென்றிருக் தவர் கானத்திமலையில் குடுமித் தேவரைத் தரிசித்த ஆறு நாளில் கண்ணையே பிடுங்கிச் சுவாமி கண் ணில் அப்பும் அதியற்புத பக்தி வைாாக்கிய முற்று முத்தியடைக் கவர். இவர் வாலாற்றைப் பெரிய புராணத்துட் பாக்கக்காணலாம்.

5. கோசிகன்பால் விசுவாமித்தி: முனிவர் பின்னே. உன்னுங்கால் - ஆராயுமிடத்து. மன்னன் - தசரதன். இயல்பு