பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 437

தீட்டிய கண்களின் பிரகாசம் பக்கத்திலுள்ள காதணிகளிற் பகித லால் முத்துத்தோடு லோத்தினத்தோடாகத் தோன்றிற்று.

24. இயல் அணங்கு - அழகிய தெய்வப்பெண்போன்ற தோழி. இன்ன பரிசு என்று - இப்படிப்பட்ட தன்மையென்று. கொடிக்கு - தமயந்திக்கு, உவமையாகுபெயர்.

25. பூ வரைந்த குழல் - மலர் சூட்டிய கூந்தல். உளம் ஊசல் போல் அலேயப் பெற்ரு ளென்க.

26. பூணுக்கழகளிக்கும் பொற்முெடி என்பதன் கருத்து. இயற்கை அழகுவாய்த்த தமயந்தியின் உறுப்புகளைச் சேர்ந்த ஆபரணங்கள் அவ்வுறுப்புகட்கு அழகுசெய்ய இயலாது அவ்வுறுப் புகளின் அழகால் தாம் விளக்கமுறும் என்பதாம், பொன்னழ கைத் தாமே புதைப்பார்போல்...மலரும் சூட்டினர்.” என இவ் வாசிரியரும் அணிகளைந்தழகுசெய்யும் அணங்களுள்' எனப் பிறரும் கூறியவை காண்க. நாண் உக்கு - வெட்கம் கெட்டு 27. மரபு குலம். கடிமாலே - சுயம்வாமாலை, விகியின் மன். னவன் - விதிக்கடவுள். (பிரமன்)

28. தேவர்களாயின், கண்ணிமையாது; கால் பூமியில் படி யாது; மாலை வாடாது, இவை உண்மையால் நளனைப் பிரித்தறிக் தாள். தாமரை கன்னுதல் அன்ள்ை - இலக்குமியை சிகர்த்தவள்.

29. வன்மாலே - வலிய மயக்கத்தை. பொன் - இலக்குமி போன்ற தமயந்தி; ஆகுபெயர். அாசர் வன்மாலே குட நளன் பொன்மாலை சூடினன் எனச்சமத்காாங்தோன்றக்கூறியது காண்க.

80. வெளுத்தது, வெட்கத்தாலென்க. ஒண் தாாை-ஒள்ளிய கூர்மை; கோமாலை வேல் - சிறந்த மாலையணிந்த வேலாயுதம்; கோ - கிசனமுமாம். குலமாலை - குலத்துக்குமாலே போன்றவள், இப்பாட்டில் சொற் போருட்பின்வருநிலையணி காண்க,

31. மல்லல்மறுகு - (பல) வளங்களையுடைய தெரு. மட காகு - இளமையான பசு, மழவிடை - இளங்காளை. செம்மாந்து - இறுமாத்து. மறுகில் புறப்பட்டான் எனக்கூட்டுக.