பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்டாப் பகுதி. 13

பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி ஆசாவன் பிளேயவனே உருங்கானம் அடைந்தவனே! சீராளும் வாைமார்பா திருக்கண்ண புரத்தரசே! தாாாரும் நீண்முடியென் தாசாதி! தாலேலோ, 6. சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கானம் அடைந்தவனே அற்றவர்கட் கருமருந்தே அயோத்திநகர்க் கதிபதியே! கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே! சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ. 7.

5. திருமாலே.

இது நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தின் நான்கு பெரும் பிரிவி னுள் முதலாயிரத்தைச் சேர்ந்தது. இதனை அருளிச்செய்தவர் தொண்டாடிப்போடியாழ்வார். இவரது பிள்ளைத் திருநாமம்’விப் ாளாாயணன்' என்பது. இவர் சோழநாட்டில் திருமண்டங்குடியில் ஆரீ வைஷ்ணவ சோழியர்குலத்தில் அவதரித்தவர். இவர் கிருவ சங்கம் சென்று அரங்கநாதருக்குத் துளவத் தொண்டுசெய்ய எண்ணி திருகந்தவனக் கைங்கிரியம் செய்திருந்தவர். 'திருமங்கை யாழ்வார் திருவாங்கத் திருமதில் கட்டுங் காலத்தில் தொண்ட ாடிப்பொடியாழ்வார் பெருமாளுக்குத் திருமாலே சேர்க்கிற இடம் எதிர்ப்பட அவ்விடத்தை விலக்கிக் கட்டிக்கொண்டு போனுர்’ என்று பின்பழகிய ஜியர் திருமங்கையாழ்வார் சரித்திரத்துள் உாைத்திருக்கிறபடியால் இவ்வாழ்வார் திருமங்கை மன்னன் காலத்தவாாவர். திருமங்கையாழ்வார் கி.பி.785-க்கு முன்னி ருந்த வைாமேகன் என்னும் 2-வது நந்திவர்மனைத் தம்பாசுரத்துள் இறந்த காலத்தில் வைத்துப்பாடியிருத்தலின் அவர் அவனது ஆட்சியிறுதிக் காலமாகிய கி.பி-785-க்குப் பின்னர் 3-வது நந்தி வர்மன் காலமாகிய கி பி-835-க்குள் இருந்தவராவர். ஆகலின் இவ் வாழ்வார் எட்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலிருந்தவராவர்.

இவ்வாழ்வார் பிறவியின் இழிபை எடுத்துக்கூறி, அதனைக் கடந்து, அழிவில் இன்பமாகிய கிருநாம வைபவத்தைத் தாம்.