பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அறிவுநூல் திரட்.ே

இந்நூலுக்குப் பால் இயல் அதிகார அடைவு வகுத்துக் கடவுள் வாழ்த்தும், உரையும் இயற்றியவர் பதுமனுர் என்ற ஜைனப் புலவர். இந்நூல் சுருங்கச் சொல்லல் அழகினும், சொல்ல ருமை பொருளருமையிலும், திட்ட நுட்பங்களினும், நீதியினும், அணிவகைகளிலும், நடையினும் தமிழ் வேதமாகிய திருக்குற ளுக்கு அடுத்த படியாக வைத்துப் பாராட்டப்படுவது. திருக்குறள் கற்பார் இதனை முதலிற் கற்றல்முறை. ஆலும் வேலும் பல்லுக் குறுகி நாலும் இாண்டும் சொல்லுக்குறுதி' "பழகு தமிழ்ச் சொல்லருமை காலிாண்டில்" என்று வழங்கும் மூதுரைகளே இக் நூலின் பெருமைக்குச்சான்று. இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும் பிரிவையும், அதனுட்பிரி வாகிய நாற்பது அதிகாரங்களையும் உடையது. ஒவ்வோர் அதி காாத்துக்கும் 10 வெண்பாக்களாக அதிகார் விஷயத்தைப் பல் திறப்படவிரிக்கும். இதனிற்கானும் வெண்பாக்கள் பல நேரிசை வெண்பாக்கள், சில இன்னிசை வெண்பாக்கள். இந்நூற்சுவை யை நகர்ந்த மேனுட்டுப் புலவரான டாக்டர் ஜி. யூ. போப் என்ற இங்கிலீஷ் பாதிரியார் இந்திய ஜனங்களுக்குள் தமிழாே முதன்மை பெற்றவர்; அவர்களே அங்கனம் செய்தது குறளும், நாலடியுமே” எனக் கூறியுள்ளார். இந்நூல் ஜைனர் பாடியதாயி லும் இதனுள் கூறப்படும் நீதிகளும், விதிகளும் யாவரும் மேற் கொள்ளத்தக்கவைகளே. இந்நூல் தமிழுரையாசிரியர் எல்லாரா னும் எடுத்தாளப்பட்ட பெருமையுடையது. இந்நாவின் காலம் 1800 வருடங்களின் முன்னதாகும்.

பொருள்.

வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்

நடுவண தெய்த இருதலையும் எய்தும்.

நடுவண தெய்தாதான்் எய்தும் உலேப்பெய்

தடுவது போலுந் துயர்.