பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

5

நீதிப் பகுதி.

6. வள்ளுவர் நேரிசை.

இந்நூலை இயற்றிய ஆசிரியர் அரசஞ் சண்முகனும் என்பவர். இவர் மதுரையை அடுத்த சோழவந்தான்ுாரில் வேளாண் மரபில் அாசபிள்ளை என்பார்க்கு, கி.பி.1880-ம் வருடம் புதல்வாய்த் தோன்றிக் சண்முகம்பிள்ளை என்ற இயற்பெயரோடு விளங்கியிருந் தவர். இவர் இலக்கண இலக்கிய ஆராய்ச்சியிலும் உரை நடை எழுதுவதிலும் சித்திாகவிகள் யாப்பதிலும் ஆந்தல் மிக்கவர். இவ ருடைய உரைகளும் செய்யுள்களும் திட்பதுட்பஞ்செறிந்தவை. பல வருடங்கள் மதுரைத் தமிழ்ச்சங்கக் கலாசாலையிலும் சேது பதி ஆங்கில உயர்தா கலாசாலையிலும் தமிழாசிரியராக அமர்ந் திருந்தவர். ஆரவார நீர்மையில்லாதவர். அடக்கமும் சாந்தமும் தண்ணளியு மிக்கவர். திருக்குறள் சண்முகவிருத்தி, (சிலகுறளுக்கு மட்டும்) தொல்காப்பியப் பாயிரவிருத்தி முதலிய உரைகளும் எக பாத நூற்றந்தாதி முதலிய பிரபந்தங்களும் இவர் இயற்றியுள்ளார்.

இந்நூல், வரிசைக்கிாமமாக ஒவ்வொரு திருக்குறளையும் பின் னிாண்டடியாக வைத்து அக்குறள் நீதிக்கியைந்த ஒர் சரித்திாம் அல்லது ஒர் நீதி அடங்குமாறு பாடிய அடிகள் இரண்டை முன் னிாண்டடியாக அமைத்து இரண்டாம் அடியின் மூன்றாம் சீரில் வள்ளுவாே! என நாயனர் பெயரை முன்னிலையாக்கித் தனிச் சொல்லோடு நேரிசை வெண்பா ரூபமாய் இயற்றப் பெற்றிருத்த லின் வள்ளுவர் நேரிசை எனப் பெயர் பெற்றது. (இந்நூல் பூர்த் தியாதற்கு முன் ஆசிரியர் காலஞ்சென்றனர்.)

கடவுள் வாழ்த்து.

சாயா இாணியனும் சாய, அவன் இளஞ்சேய்

மாயால் வாழ்வுறலென்? வள்ளுவரே!.ஆயின்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர். நீந்தார்;

இறைவன் அடிசோா தார். (1)