பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 49

இவர் முதற்கண் பாண்டியன் ஆஸ்தான்த்துப்புலவராயிருந்து, பின்னர் பாண்டியனுல் சோழன் அவைக்களத்துக்கனுப்பப்பட் டனரெனவும், சோழனது சமஸ்தான்ப்புலவரான ஒட்டக்கூத்தர் பொருமையால் இவரிடம் மிக்க பகைமைகாட்டி வந்தனதெனவும் அதல்ை புலவர் சோழன் சபையை நீங்கி உறையூாையடுத்த மள் ளுவநாட்டு முரணைநகர்ச் சந்திரன்சுவர்க்கி என்னும் சிற்றரசனிடம் சென்று அவனது சமுகவித்துவானுய்த் தங்கியிருந்தனமெனவும் வரலாற்ருல் அறியப்படுகின்றன. இக்காலத்தில் தான்் இந்நூலை இப்புலவர் பாடியிருத்தல் வேண்டுமென்று கருதப்படுகிறது. சங்க நிதிபோல் தருசந்திான் சுவர்க்கி' 'வண்டார் வளவயல்சூழ் மள் ளுவநாட் டெங்கோமான், தண்டார் புனை சந்திான் சுவர்க்கி,” 'மாமனுநூல் வாழ வருசந்திரன் சுவர்க்கி, தாமரையாள் வைகுக் தடந்தோளான், காமருபூந் தாரான் முரணைநகர்’ எனச் சந்திரன் சுவர்க்கியை இவர் நளவெண்பாவில் பலவிடங்களில் புகழ்ந்து பாடியுள்ளார். இவர்செய்த வேறு நூல் இரத்தினச் சுருக்கம். கள வெண்பா ஒன்றே இப் புகழேந்தியாரது பெரும்புகழுக்குப் பேரி விக்காதற்குப் போதுமானது. இவரது வெண்பாக்கள் ஒசையமை தியும் பொருளாழமும் இயற்கைச் சுவையும் பொருந்திக் கற்போ குள்ளம் காமுறும் பொற்போடு திகழ்கின்றன. நளச்சரிதையை முதன்முதல் விரித்துத் தமிழிற் கூறப்புகுந்த நூல் இதுவே. நள வெண்பாவிற்கு முதனூல் வடமொழிப்பாாதத்திலுள்ள நளோபாக் கியான பருவம்,

பெண்கள் எளிதில் படிக்கவும் கேட்கவும் எளிய நடையில் அல்லியாசிமாலை, கோவலன் கதை, பாண்டவர் வனவாசம், வை. குந்த அம்மானே என்பவற்றையும் இவர்பாடினரெனப் பலர்சொல்லி வருகின்றனர். இங்கனமே இவர் இவற்றைச் செய்திருக்கலாம். இருநூறு முந்நூறு வருடங்கட்கு முன்னிருந்த தேசிங்குராஜன், காத்தவராயன் முதலியோர்களைப்பற்றிய வழுஉச்செறிந்த கதைப் பாடல்களையும் இவரே பாடினரென இவர்மீது ஏற்றிக்கூறுவது புனைந்துரையென அதனைக் கொள்ளாது தள்ளுக.

4