பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 65.

4. தேம்பாவணி.

இது கிறிஸ்தவ மதத்திற் காதாாமாயுள்ள விவிலியது.ாலிலும் அதற்குச் சார்பாய்ச் செய்துள்ள வேறு சில நூல்களிலுமுள்ள உண்மை நிற்ைந்த சரித்திரங்களை எடுத்துத் தமிழ்ப் பாடல் ரூப மாய் வெளியிடும் ஒரு பெருங்காப்பியம். அடியிற் கானும் பகுதி இக்காவியத்தில் இயேசுநாதர் உலகில் அவதரித்த சிறப்பின விளக்கும் மகவருள்படலத்தைச் சேர்ந்தது.

இக்காவியத்தை இயற்றியவர் Constanius Beschi. இவ ருக்கு வீரமாமுனிவர், தைரியநாதன் என்ற பெயர்களும் வழங் கும். இவர் கரோப்பியர். வட இட்டாலி தேசத்தில் வேனிஸ் நகருக்கு மேற்கே 90 மைல் துரத்திலுள்ள கால்டிக்கிலியானி (Castiglione) என்னும் ஊரில் கி.பி.1680u நவம்பர் 8வ. பிறந்தவர். இவர் இளவயதிலேயே கிறிஸ்தவமதப் பற்றுடையவ ாாய் இந்தியாவில் மதப்பிாசாாம் செய்யக்கருதிப் புறப்பட்டு, 1708-இல் இந்தியாவிலுள்ள கோவாப்பட்டினத்தில் வந்திறங்கித் தங்கியிருந்து, பின்னர் திருநெல்வேலிக்கு வந்து தமிழ்ப்புலவர் களே அடுத்துத் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்கத் தொடங் கிப் பெரும் புலவராகி அந்த ஜில்லாவிலேயே தமது வேலையைச் செய்யத் தொடங்கினர். இவர் வதிந்திருந்த ஊர்கள் வடக்கன் குளம், காமயநாயக்கன்பட்டி, கயற்றறு. 1716ல் மதுரைக்கு வங் தார். பின்னர்த் திருச்சிய்ை அடுத்த வடகார்பட்டி என்னும் கிராமத் துக்குச் சென்று தங்கியிருந்து, 1724u தேம்பாவணியைப் பாடி முடித்தார். டிெ ஜில்லா ஆரூரிலிருக்கும்போது இதற்கு உரையும் செய்தார். தமிழில் முதன்முதல் அகராதி செய்தவர் (சதுரகராதி) இவரே. வித்தியார்த்திகளுக் கேற்ற வசன நூல் பலவும், செய் யுள்நூல் பலவும் சில இலக்கணங்களும், தமிழ் பிரஞ்சு அகராதி, தமிழ் லட்டின் அகராதி, தமிழ் போர்த்துகீஸ் அகராதி என்ற அகராதிகளும் செய்துள்ளார். இவர் அங்கிய தேசத்தல்ாாயிருக் தும் தமிழ்மொழியில் இவருக்கிருந்த அபிமானமும் அபிருசியும் அளவிடற்பாலனவல்ல. இவரது தமிழபிமானத்தைத் தேம்பாவணி, மகிழ்வினைப்படலம் 133-ம் பாட்லே விளக்கும். இக்காவியத்தில்

5