பக்கம்:அறுந்த தந்தி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னத்தின் வெற்றி 97

பூநீ கைலாசத்தில் அன்று ஏதோ ரகசிய ஆலோசனை கடந்தது. வழக்கம்போல ரிஷப தேவரும் கருடதேவ ரும் திருக்கோயிலின் வெளியிலே உள்ள மண்டபத்தில் இருப்பவர்கள், அடிவாரத்து மண்டபத்திலே இருந்தார் கள். மிகவும் அங்காங்கமான ஆலோசன் நடக்கும்போது தான் இப்படி அவர்களுடைய ஸ்தானத்துக்கு மாறுதல் ஏற்படும். ஆனல் இந்த மாதிரியான ரகசியக் கூட்டம் யுக யுகாந்தரங்களுக்கு ஒரு முறைதான் ஏற்படும். இப்போது யுகசக்தி ஒன்றும் இல்லை ; பிரளயமும் இல்லை; புதிய சிருஷ்டியும் இல்லை. அப்படி இருக்க இந்த அக்தரங்க ஆலோசனைக்குக் காரணம் தேவர்களுக்கு விளங்கவில்லை. மும்மூர்த்திகளைத் தவிர இந்திரனுக்குக்கூட அந்த ஆலோ சனயில் இடமில்லை. திருமாலினுடைய அந்தாங்க ஆலோசனைகளுக்குக் கருடதேவர் புறம்பாக இருக்க மாட் டார். அவர் அறியாத ரகசியமே இல்லை. ரிஷபதேவரும் சிவபெருமானுடைய பிரதான பிருத்யராகிய நந்தியின் ஆம் சம் அல்லவா? இந்த இருவரையுங்கூட விலக்கிவைத்து மந்திராலோசனை நடக்கிறது. • १

மந்திராலோசனையின் முடிவு வெளியாயிற்று; வாயு தேவன் அதைப் பிரகடனம் செய்தான். தேவலோகத்தில் ஏதாவது புதிய விநோதம் நடக்கவேண்டுமென்பது திரி மூர்த்திகளின் யோசனை. பூலோகத்தில் வாகனங்கள்ை ஒடவிட்டுப் பக்தயம் நடத்துகிருர்களாம். அப்படி இங் கும் வாகனங்களைக் கொண்டு பந்தயம் நடத்துவதாகத் திருவுள்ளங் கொண்டிருக்கிருர்கள் மும்மூர்த்திகளும். முதல் முதலில் தங்களுடைய சொந்த வாகனங்களைக் கொண்டே இந்த விநோதத் திருவிளையாட்டை கட்த்தத் தீர்மானித்திருக்கிருர்கள்' என்ற செய்தி தேவல்ோகம் முழுவதும் பரவியது. பரவாத இடங்களுக்கெல்லாம் தாமே போய்ப் பாப்பினர் நாரத பகவான். --- - - - - - -

செய்தி ரிஷபதேவர் காதில் விழுந்தது; கருட்பகவான் செவியேற்ருர்; பிரம்ம தேவருடைய அன்னமும் தெரிந்து

அறு. ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/104&oldid=535343" இலிருந்து மீள்விக்கப்பட்டது