பக்கம்:அறுந்த தந்தி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுந்த தந்தி 5.

றிக்கொண்டான். அப்போதே இவன் யாரோ சங்கீக கிரrரகுசு என்று தீர்மானித்துக்கொண்டேன். தமி ழிலே கீர்த்தனங்கள் செய்தானும். தியாகராஜர் கீர்த்தனங் கள் மாதிரியே பாடினுளும்.

'அவன் பாடாத கீர்த்தனம் இல்லை. கீர்த்தன மென்று அவன் சொல்லிக்கொண்டான். சுத்தப் போக்கி ரித்தனம்! சங்கீதம் தெரியுமா?’ என்று கேட்டேன். 'யாப்பிலக்கணம் தெரியும்; மெட்டை வைத்து ஒட்டிப் பாடியிருக்கிறேன். ஒரு பிழை இராது என்று பெருமை யாகப் பேசினன். பாட்டைச் சொல்லச் சொல்லிக் கேட் டால் மகா கண்ணாாவியாக இருந்தது. வெட்டும் கட்டும் முட்டும் என்று பிராசத்தை இறைத்திருந்தான். டப டப பட பட வென்று முடுகுகளைப் போட்டிருந்தான். பல் லவி தனியாக கிற்கிறது; சாணம் அறுந்து தொங்குகிறது. 'ஏனேயா, இந்தச் சாணத்தையே பல்லவியாகப் போட் ப்ெ பாடலாம்போல் இருக்கிறதே! என்று கிண்டலாகக் கேட்டேன். ஆகா, அப்படியே செய்யலாமே! எதை எங்கே எப்படிப் போட்டாலும் பொருத்தும்; பொருட் சிறப்புக் கெடாது' என்ருன். அட மூடமே!’ என்று மனசில் சொல்லிக்கொண்டு ஒரு வழியாக ஸ்தோத்திரம் பண்ணி அனுப்பிவிட்டேன். எதற்குச் சொல்ல வந்தே னென்ருல், இப்படியெல்லாம் சங்கீதத்தையும் சாகித்தி யத்தையும் பண்ணுகிறவர்களுக்கு இந்தக் கீர்த்தனங் களைப் பார்த்தாவது புத்தி வாட்டுமென்று தோன்று கிறது.’’ - இப்படி அவர் பழங்கதைகளை எடுத்துப் பேச ஆரம்பித்தால் அதற்கு முடிவே இராது.

ஒரு நாள் சர்மா பைரவி ராகத்தில் ஒரு புதிய கீர்த் தனத்தை இயற்றிக்கொண்டு தம் ஆசிரியரிடம் வந்தார். ாாகத்தின் ஆரோகண அவரோகண ஸ்வாங்கள் சாணங் களிலுள்ள அமைப்பிலேயே விழும்படி மிகவும் நன்ருக அமைந்திருந்தது. பல இடங்களில் ஸ்வராக்ஷரங்கள் இயற்கையாகவே பொருந்தியிருந்தன. கேட்ட குரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/12&oldid=535252" இலிருந்து மீள்விக்கப்பட்டது