பக்கம்:அறுந்த தந்தி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 அறுந்த தந்தி

அதென்னடீ அது ! நான் சொல்கிறேனென்று கினைத் துக்கொள்ளாதே. நீங்கள் இருக்கிற அந்தஸ்துக்கு இந்த மாதிரி மனுஷர்களோடு சேர்ந்து குடியிருக்கலாமோ! குழந் தையை வேறே தத்துக் கொடுத்துவிட்டாய். நாளைக்குக் குழந்தைக்கு அந்தப் பழக்கங் தானே வரும்? ஏற்கனவே நம் அகத்துப் பையன்களெல்லாம் படிப்பில் சுப்பிரதிபர் தான். இன்னும் இந்த கிாகூாகுசுதிகள் போடுகிற சாதத்தை வேறு சாப்பிட்டுவிட்டால் சொல்லவே வேண்டாம்.'

பாட்டி இப்படி வைத்த வத்திதான் பிடித்துக்கொண் டது. பார்வதியின் பார்வையையே மாற்றிவிட்டது.

இந்த மாற்றத்தை முதல்முதலில் அறிந்தவள் ஜானகி. அது பிறகு அவள் கணவருக்கும் தெரிந்தது. பரமேசுவ ாையருக்கும் தெரிந்துவிட்டது. முதலில் அவர் இதைப் பெரிதாக கினைக்கவில்லை. ஆனல் வாவாப் பார்வதியின் போக்கு, கட்டுக்கு அடங்காமல் போயிற்று. பரமேசுவ ாையர் கூறிய சமாதானம் ஒன்றும் பயன்படவில்லை.

ஜானகியும் அவள் கணவரும் உள்ளுற வருத்தமடைங் தார்கள். குழந்தையிடம் அவர்களுக்கு இருந்த அன்பு மாசு மறுவற்றது. அவர்கள் உலகமக்களின் கண்முன் ஏழைகளாக இருக்கலாம். ஆனல் அவர்களிடம் நிறைய அன்புச் செல்வம் இருந்தது. உலகத்தார் மதிப்பில் தாழ்ந்த தொழிலே ராமசாமி ஐயர் செய்பவராக இருக்க லாம். ஆலுைம் அவர் உள்ளம் உயர்ந்தது. மரியாதைக்குக் கட்டுப்பட்டு மானத்துக்கு அஞ்சி வாழ்பவர் அவர். பணம் இல்லையென்ருல் எல்லாமே இல்லையாகிவிடுமா? பணம் இருந்துவிட்டால் நல்ல குணங்களெல்லாம் அவ்ர்களிடம் அடைக்கலம் புகுந்துவிடுமா? பணம் குணக்குறைவை மறைக்க உதவுகிறது. குணம் இருந்தாலும் அதைத் தொலைத்துவிடச் சூழ்ச்சி செய்கிறது.

குழந்தையினிடம் அன்பு வைத்தது பிழையா? அதற்கு ஒவ்வொரு நாளும் தனியே சுத்தமான நெய்யில் சய்த பகடினம் கொண்டுவந்து கொடுத்தது கவரு? காலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/121&oldid=535360" இலிருந்து மீள்விக்கப்பட்டது