பக்கம்:அறுந்த தந்தி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகும் வரம்

எவ்வளவோ காலம் தவம் புரிந்தான். காய்கனி உண்டு தவம் செய்தான்; பிறகு இலைகளைக் கின்று தவம் புரிந்தான்; அப்புறம் நீரை மாத்திரம் உண்டான் ; கடைசி யில் காற்றை நகர்த்து கடுக்கவம் புரிந்தான். அவனுடைய தவக்கனல் மேலுலகத்தை யெல்லாம் தகித்தது. அமார் கள் அஞ்சி நடுங்கினர். இந்திரன் தன் பதவிக்குக் கேடு வந்துவிடுமோ என்று பயந்தான். பிரம்மாவுக்குக்கூட நெஞ்சம் துணுக்குற்றது. - -

மகாவிஷ்னு யோகநித்திரையில் ஆழ்ந்திருத்தான். தேவர்கள் கூட்டமாக வந்து தங்களுடைய தோத்திாங்க வால் திருமாலின் துயிலேப் போக்கப் பார்த்தனர். நாதர் பகவானே அணுகித் தம்முடைய மாகதி யாழை மீட்டி இனிய கானத்தை இசைக்கத் தொடங்கினர். பகவான் திருவிழி மலர்ந்து தண்ணிய திருப்பார்வையை நாாதர் மேலே ஒடவிட்டான். - .

"எம்பெருமானே, அமரலோகம் கட்டுக்கெட்டுத் தடு மாறுகிறது. கற்பகவிருக்ஷம் வாடிவிட்டது. காமதேனு பால் தருவதில்லை. யாரோ ஒரு நான் செய்யும் தபசின் உஷ்ணம் அமரலோகத்திலே ஒர் உஜ்வலமான ஜ்வாத்தை உண்டாக்கியிருக்கிறது. தேவரீருடைய கடைக்கண் பார் வையால் ஒரு முறை பார்வையிட்டால் அடியேன் சொல் வதன் உண்மை விளங்கும். பிரபோ, இந்தச் சமயத்தில் எளியேங்களைச் சோதனை செய்யக் கூடாது' என்று நாரத முனிவர் காங்குவித்து விண்ணப்பித்துக்கொண்டார். ஆழி வண்ணன் கிருமுகத்தில் புன்முறுவல் அரும்பியது. தேவர்களைப் பயப்பட வேண்டாமென்று சொல்; நாம் அங் தத் தபஸ்விக்குத் தரிசனம் தந்து ஆட்கொள்கிருேம்’

என்று திருவாய்மலர்ந்தருளினுன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/131&oldid=535370" இலிருந்து மீள்விக்கப்பட்டது