பக்கம்:அறுந்த தந்தி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுந்த தக்தி 7

முயற்சி என்றுதான் நான் கினேக்கிறேன். என்னுடைய முத்திரை எதற்காக? ஸ்வாமியின் புகழுக்கு நடுவே என் பயரை வைத்தால், சகஸ்ரநாம அர்ச்சனே செய்வதற்கு

இடையில் நம்முடைய தலையிலும் ஒரு பூவைப் போட்டுக் கொள்வதுபோல ஆகாதா?’’

'நீ சமத்காரமாகத்தான் பேசுகிருய். உன்னுடைய சாந்த ஸ்வபாவமும் தெரிகிறது. நீ கீர்த்தனங்களில் அமைத்திருக்கும் விஷயங்கூட உன்னுடைய உன்னத மான மனநிலையை வெளிப்படுத்துகிறது. ஆலுைம் நான் சொல்வதைக் கேள். முத்திரை வைப்பது அகங் காரத்தின் அடையாளமாகாது. கியாகராஜ ஸ்வாமிகள் வைக்கவில்லையா? திகதி தரவர்கள் வைக்கவில்லையா? அவர் களெல்லோரும் எவ்வளவு பெரியவர்கள் ! அவர்களுடைய வழியைத்தான் உனக்குச் சொல்கிறேன். உன்னுடைய கீர்த்தனங்களின் உயர்வை நீ முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை. எதிர்காலத்தில் இவற்றுக்கு நிச்சயமாகப் பெரும் புகழ் உண்டாகும். இவற்ருேடு உன் பெயரும் நிலைத்து கிற்க வேண்டும். ஆகையால் நான் சொல்வதைத் தட்டாமல், இனிமேல் செய்யும் கீர்த்தனங்களில் உன் முத்திரையை வைக்கத்தான் வேண்டும்.’’ .

ராம பத்திர சர்மாவுக்கு ஒன்றும் தோன்றவில்லை. 'ஆக்ஞையைத் தட்டும் அபசாரத்தை நான் செய்யமாட் டேன். பார்க்கிறேன்’ என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.

2

தைமாதம் பிறக்கப் போகிறது. அந்த மாதம் முதல் ராமபத்திர சர்மாவுக்கு இடைவிடாத சங்கீதக் கச்சேரி கள் கிடைக்கும் காலம். மார்கழியில்தான் சிறிது ஒய்வு. ஆகையால் இந்த மாதம் ஒரு பெரிய கீர்த்த னத்தை இயற்றி ஒரு வகையாகத் தம்முடைய குருநாத டைய விருப்பத்தையும் கிறைவேற்றலாமென்று சர்மா கினைத்தார். கீர்த்தனத்தைப் பூர்த்தி செய்து தைமாதப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/14&oldid=535254" இலிருந்து மீள்விக்கப்பட்டது