பக்கம்:அறுந்த தந்தி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அறுந்த தந்தி

இருந்தது. ஒரு காள் ஒரு யுகமாகப் போயிற்று. ஒவ் வொரு கணமும் அவனைப் பயமுறுத் திவிட்டே கழித்தது.

இப்பொழுதோ? அவன் அடங்கிக் கிடந்தான். காலத் தையும் அடக்கிவிட்டானே! ஆம், తొ; இருபது, முப் பது, நாற்பது, நூறு, இருநூறு என்று வருஷங்கள் சென் றன; ஒடின. ஆனல் அவன் அசையவில்லை. உள்ளம் நடுங்கவில்லை. ததேகத் தியானமாய், 'காலகால, மாணப் பிச்சை கா!' என்ற மந்திாஜபத்திலே லயித்திருந்தான்.

உலகம் எவ்வளவோ மாறுதல்களை அடைந்தது. அந்த மாறுதலில் ஒர் அணுவளவேனும் அவனுள்ளே புக வில்லை. காலக்கடலின் பேரலைகளை யெல்லாம் அவன் அலசல்யமாக மலையைப்போலத் தாங்கி நின்றன்.

இருள் கவிந்திருந்த அதன் உள்ளப்பரப்பிலே ஒளி உதயமாயிற்று. பயமும் நடுக்கமும் வேதனையும் கிாம்பின அகத்தில் அவை இருந்த சுவடே தெரியாமல் மறைந்தன. உள்ளம் நிர்மலமாயிற்று. அங்கே கனி மோனக் கவச்சுட ரின் ஒளி படாத் தொடங்கியது. அவன் வாய் முனு முனுக்கவில்லை; உள்ளம், காலகால, மரணப்பிச்சை தா" என்ற மந்திரத்தை வண்டைப்போல முரன்றது. உணவில் லாமல், இயக்கமில்லாமல் இருந்த அந்த உடம்பில் வாட் டம் காணவில்லை. உள்ளே முளைத்த சோதி வெளியிலும் பொசிக்காற்போல அந்த மேனியிலே ஒரு பொன்னிறம் பொலிந்தது; நறுமணம் பாவியது.

ஒளியின் பரப்பு உள்ளமாகிய நிலத்திலே அதிக மாயிற்று. எங்கும் பரந்து கிரம்பி இனிக்கும் பேரொளி, வெள்ளமாகப் பாயத் தொடங்கியது. அதோ, ஜல்ஜல் என்ற சிலம்பொலி கேட்கிறதே. சூரியன் தன் பதினுயிரங் கிரணங்களோடும் உதயமாவது போன்ற ஒளிப்பிழம்பு அதோ, அதோ வருகிறது. ஒளிப் பிழம்பினூடே கண் ணைக் குளிர்விக்கும் அழகிய திருக்காட்சி! குனித்த புரு வமும், கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும், பனித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/151&oldid=535390" இலிருந்து மீள்விக்கப்பட்டது