பக்கம்:அறுந்த தந்தி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீலப் பந்து 151

அவருக்குக் கிடைக்கும்படி அருள் செய்தாரென்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். இல்லையானுல் அது அவரைத் தேடி வருவானேன்? அதன் திருமேனி வண் ணத்தை மாற்ற வேண்டுமென்று கினைத்ததற்கு என்ன காரணமென்று அவரைக் கேட்க யார் இருக்கிறர்கள்? வர்ணம் பூசிவிட்டால் பந்துக்குரியவர் கண்டுபிடிக்க மாட்டாரென்று எண்ணினதாகக் குற்றஞ் சாட்ட நமக்கு உரிமை ஏது?

ஆனல் இந்தச் சண்டையில் முதலியார் அதிகமாகக் தலேயிடவில்லை. ஏதோ இரண்டொரு பேச்சு முதலில் சொன்னரே ஒழிய, அதற்கு மேலே விவகாரத்தை வளர்த்தவில்லை.

அதற்குப் பதிலாக இப்போது அவர் அதிகமாக மெளனமே சாதித்து வந்தார். சில காலமாகக் கோபங் கூட அவரை விட்டுப் போயிற்ருே என்று சந்தேகப் படும்படி இருந்தது அவர் கிலே. ஆபீவலிலிருந்து வந்த தும் வராததும் தம் பையனைக் கூப்பிடுவார். இண் னேக்கி விளையாடப் போனியா?’ என்று கேட்பார். அவன் நடுங்கிக்கொண்டு, 'இல்லை’ என்பான்.

போகிறதுதானே?”

'அவங்க சேத்துக்கமாட்டேங்கருங்க.'

έεφτσαπ 2""

இதற்குப் பதில் இல்லை; விம்மி விம்மி அழும் அழு கைதான் பதில்.

அவர்களுடைய எச்சும் பேச்சும் குழந்தையின் உள் ளத்துக்குள்ளே ஆழ்ந்து பதிந்தன. அதைப் பற்றிய பேச்செடுத்தாலே அவன் குன்றிப்போய் கிற்பதும், வேதனே தாங்காமல் அழுவதும் முதலியார் உள்ளத்திலே சிறிதளவு சென்றன. அவருக்கும் மான உணர்வு தலை காட்டியது. என்னவோ யோசனையில் ஆழ்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/158&oldid=535397" இலிருந்து மீள்விக்கப்பட்டது