கதையும் கத்திரிக்காயும் 157
- இந்தப் பாட்டி மார்க்கண்டேயர், சாவித்திரி முதலி யவர்களின் இனத்தைச் சேர்ந்தவளா, என்ன?’ என்று அலட்சிய புத்தியோடு புன்முறுவல் பூத்தான்.
'தர்மராஜன் என்னும் பெயருக்கு எற்றபடி மந்த ஹாஸ் முகத்தோடு தரிசனம் திரும் உன் கருணையை நான் எப்படிப் புகழ்வேன்!” என்ருள் பாட்டி.
'கம்முடைய சிரிப்புக்கு வியாக்கியானம் அல்லவா செய்கிருள்?’ என்று எண்ணி உதட்டை இறுக மூடிக் கொண்டான் யமதர்மன்.
ஹே சூரியகுமார, சிவபெருமானுடைய அம்சம் உன்னிடம் இருக்கிறதென்பதை உன்னுடைய மெளன்த்தா லும் தெளியவைக்கும் அருமையை நான் பாராட்டாமல்
இருக்க முடியுமா?’
தர்மராஜனுக்குச் சங்கடமாகப் போய்விட்டது. தன் கையிஞல் தன் வாகனமாகிய எருமைக்கடாவின் பிடரின் மேல் ஒரு கட்டுத் கட்டினன். ஒன்றும் பேச இயலா மலும் செய்ய இயலாமலும் போன கிலேயில் அதைத்தான் அவன் செய்ய முடிந்தது.
'உன்னுடைய இங்கிதத்தை அடியேன் கன்முகத் தெரிந்துகொண்டேன். உன் வாகனத்தைத் தட்டி அதற்கு நீ உற்சாகத்தை மூட்டுகிருய். தர்மஸ்வரூபமாகிய உனக்கு உள்ள வாகனம் வேகம் வேண்டிய பொழுது வேகம் காட் ம்ெ; சாக்தம் வேண்டுமானுல் சாந்தத்தை உடையதாக விளங்கும். அதனுடைய சாக்க அவசாத்தில் உண்டாகிய வைகளைத்தான் இன்று பூவுலகத்தில் பார்க்கிருேம். பொறு மைக்கும், சாத்தத்திற்கும், எது எதிர்வந்தாலும் லட்சியம் செய்யாத உறுதிக்கும் இருப்பிடமாகப் பூலோக மகிஷ ஜாதி இருப்பதை நாங்கள் பார்க்கிருேமே!’
யமனுக்குச் சிரிப்பு வந்தது; ஆலுைம் அடக்கிக் கொண்டான். அவன் கைகள் பாசத்தைத் தொட்டன.